என் மலர்
செய்திகள்
X
ஆப்கானிஸ்தான் அணி ஆறுதல் வெற்றி பெறுமா? - வெஸ்ட் இண்டீசுடன் இன்று மோதல்
Byமாலை மலர்4 July 2019 9:54 AM IST (Updated: 4 July 2019 9:54 AM IST)
உலக கோப்பை கிரிக்கெட்டில் லீட்சில் இன்று நடக்கும் 42-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் வெஸ்ட் இண்டீஸ் அணி, ஆப்கானிஸ்தானுடன் மோதுகிறது.
லீட்ஸ்:
ஜாசன் ஹோல்டர் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணி ஒரு வெற்றி, 6 தோல்வி, ஒரு முடிவில்லை என்று 3 புள்ளி மட்டுமே பெற்றுள்ளது. கிறிஸ் கெய்ல், நிகோலஸ் பூரன், ஷாய் ஹோப், ஹெட்மயர், கார்லஸ் பிராத்வெய்ட், இவின் லீவிஸ் என்று அதிரடி சூரர்கள் அணிவகுத்து நின்றாலும் வெஸ்ட் இண்டீசால் ஜொலிக்க முடியவில்லை. காரணம், பேட்டிங்கில் ஒருங்கிணைப்பு இல்லை. அந்த அணி வெற்றியோடு தாயகம் திரும்புமா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
இந்திய நேரப்படி பிற்பகல் 3 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.
குல்படின் நைப் தலைமையிலான ஆப்கானிஸ்தான் இதுவரை ஆடியுள்ள 8 ஆட்டங்களிலும் தோல்வியே சந்தித்துள்ளது. ஆப்கானிஸ்தான் குட்டி அணியாக இருந்தாலும் இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டங்களில் சுழற்பந்து வீச்சு தாக்குதல் மூலம் கடும் நெருக்கடி கொடுத்து நெருங்கி வந்து தான் தோற்றது. வெஸ்ட் இண்டீசுக்கு எதிராகவும் முகமது நபி, ரஷித்கான், முஜீப் ரகுமான் ஆகிய சுழல்வாதிகள் மூலம் மிரட்ட காத்திருக்கிறார்கள்.
கடந்த ஆண்டில் நடந்த உலக கோப்பை தகுதி சுற்றில் வெஸ்ட் இண்டீசை ஆப்கானிஸ்தான் வீழ்த்தி இருந்தது. அதனால் அவர்கள் கூடுதல் நம்பிக்கையுடன் களம் இறங்குவார்கள். பயிற்சியாளர் பிலிப் சிமோன்ஸ் இத்துடன் விலகுவதால் அவரை ஆறுதல் வெற்றியோடு வழியனுப்ப வேண்டும் என்பதில் ஆப்கானிஸ்தான் வீரர்கள் தீவிரமாக உள்ளனர்.

Next Story
×
X