என் மலர்
செய்திகள்
X
டெஸ்ட் சாம்பியன்ஷிப் 5ம் நாள் ஆட்டம்... உணவு இடைவேளை வரை நியூசிலாந்து 135/5
Byமாலை மலர்22 Jun 2021 6:49 PM IST (Updated: 22 Jun 2021 6:49 PM IST)
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியின் 5-வது நாளான இன்றும் மழை குறுக்கிட்டதால், ஒரு மணி நேரம் தாமதமாக ஆட்டம் தொடங்கியது.
சவுத்தம்டன்:
இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி இங்கிலாந்தில் உள்ள சவுத்தம்டனில் நடைபெற்று வருகிறது. முதலில் பேட் செய்த இந்தியா முதல் இன்னிங்சில் 217 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. நியூசிலாந்து 2 விக்கெட் இழப்பிற்கு 101 ரன்கள் எடுத்திருந்த நிலையில், 3-வது நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. நான்காவது நாள் ஆட்டம், மழை காரணமாக ஒரு பந்து கூட வீசப்படாமல் ரத்து செய்யப்பட்டது.
5-வது நாளான இன்றும் மழை குறுக்கிட்டது. இதனால் ஒரு மணி நேரம் தாமதமாக ஆட்டம் தொடங்கியது. தொடர்ந்து ஆடிய நியூசிலாந்து அணி உணவு இடைவேளை வரை, 5 விக்கெட் இழப்பிற்கு 135 ரன்கள் எடுத்துள்ளது. இந்தியாவின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோரைவிட, நியூசிலாந்து 82 ரன்கள் பின்தங்கி உள்ளது.
முன்னணி வீரர் ராஸ் டெய்லர் 11 ரன்களிலும், ஹென்றி நிக்கோல்ஸ் 7 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இந்த விக்கெட்டுகளை முகமது ஷமி, இஷாந்த் சர்மா ஆகியோர் கைப்பற்றியதால், இந்தியாவின் கை ஓங்கி உள்ளது. கேன் வில்லியம்சன் 19 ரன்களுடனும், கிராண்ட்ஹோம் ரன் எதுவும் எடுக்காமலும் களத்தில் உள்ளனர்.
Next Story
×
X