search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோவை கிங்ஸ் அணி வீரர்கள்
    X
    கோவை கிங்ஸ் அணி வீரர்கள்

    தமிழ்நாடு பிரிமீயர் லீக்: நெல்லையை வீழ்த்தி பிளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேறியது லைகா கோவை கிங்ஸ்

    லைகா கோவை கிங்ஸ் நிர்ணயித்த 170 ரன் இலக்கை எட்ட முடியாமல், தமிழ்நாடு பிரிமீயர் லீக் தொடரின் லீக் சுற்றோடு வெளியேறியது நெல்லை ராயல் கிங்ஸ்.
    தமிழ்நாடு பிரிமீயர் லீக்கில் இன்று நடைபெற்ற முதல் ஆட்டத்தில் லைகா கோவை கிங்ஸ்- நெல்லை ராயல் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இந்த போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே பிளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேற முடியும் என்பதால் இரு அணிகளும் வெற்றி பெற்றேயாக வேண்டும் என்ற நிலையில் களம் இறங்கின.

    முதலில் பேட்டிங் செய்த லைகா கோவை கிங்ஸ் 6 விக்கெட் இழப்பிற்கு 169 ரன்கள் குவித்தது. அந்த அணியின் கேப்டன் ஷாருக் கான் ஆட்டமிழக்காமல் 29 பந்தில் 5 பவுண்டரி, 5 சிக்சருடன் 64 ரன்கள் குவித்தார்.

    பின்னர் 170 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் நெல்லை ராயல் கிங்ஸ் களம் இறங்கியது. தொடக்க வீரர்கள் பாபா அபராஜித் 28 ரன்களும், சூர்யபிரகாஷ் 36 ரன்களும் சேர்த்தனர். அதன்பின் வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேறினர்.

    விக்கெட் கீப்பர் பாபா இந்திரஜித் அதிரடியாக விளையாடி ரன்கள் சேர்த்தார். இருந்தாலும் நெல்லை ராயல் கிங்ஸ் அணியால் இலக்கை எட்ட முடியவில்லை. 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 162 ரன்களே அடித்தது. இதனால் லைகா கோவை கிங்ஸ் 7 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியது.

    பாபா இந்திரஜித் 35 பந்தில் 49 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். கோவை கிங்ஸ் அணியின் வள்ளியப்பன் யுதீஸ்வரன் 3 விக்கெட் வீழ்த்தினார்.
    Next Story
    ×