என் மலர்
விளையாட்டு

ஆல் இங்கிலாந்து பேட்மிண்டன்: இந்திய வீரர் லக்ஷயா காலிறுதியில் தோல்வி

- காலிறுதியில் இந்தியாவின் லக்ஷயாவும் சீன வீரர் லி ஷி ஃபெங்கும் மோதினர்.
- இதில் 21-10, 21-16 என்ற செட் கணக்கில் சீன வீரர் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார்.
பர்மிங்காம்:
பழம்பெருமை வாய்ந்த ஆல் இங்கிலாந்து பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி பர்மிங்காம் நகரில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இந்திய அணி சார்பாக எச்.எஸ்.பிரனாய், லக்ஷயா சென், பிவி சிந்து ஆகியோரும் ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ்-சிராக் ஷெட்டி ஜோடியும், பெண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் காயத்ரி கோபிசந்த்-திரிஷா ஜாலி, அஸ்வினி பொன்னப்பா-தனிஷா கிரஸ்டோ இணையும், கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ரோகன் கபூர்-ருத்விகா ஷிவானி, துருவ் கபிலா-தனிஷா, சதீஷ் கருணாகரன்-ஆத்யா வரியாத் ஜோடியும் கலந்து கொண்டனர்.
இதில் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் எச்.எஸ்.பிரனாய், பிவி சிந்து முதல் சுற்றிலேயே தோல்வி அடைந்து வெளியேறினர். லக்ஷயா சென் மட்டும் காலிறுதிக்கு முன்னேறினார்.
காலிறுதி ஆட்டம் இன்று நடைபெற்றது. இந்தியாவின் லக்ஷயாவும் சீன வீரர் லி ஷி ஃபெங்கும் மோதினர். இதில் 21-10, 21-16 என்ற செட் கணக்கில் சீன வீரர் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார்.