என் மலர்
விளையாட்டு

X
பிராக் மாஸ்டர்ஸ் செஸ்: சாம்பியன் பட்டம் வென்றார் அரவிந்த் சிதம்பரம்
By
மாலை மலர்7 March 2025 10:10 PM IST

- அரவிந்த் சிதம்பரம் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.
- பிரக்ஞானந்தா 3வது இடம் பிடித்துள்ளார்.
பிராக்:
பிராக் மாஸ்டர்ஸ் சர்வதேச செஸ் போட்டி செக் குடியரசில் நடந்து வருகிறது. 9 சுற்றுகளைக் கொண்ட இந்தப் போட்டியில் இந்திய கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா, அரவிந்த் சிதம்பரம் உள்பட 10 வீரர்கள் பங்கேற்றனர்.
இந்நிலையில், இதன் 9வது மற்றும் கடைசி சுற்று ஆட்டம் ஒன்றில் தமிழகத்தைச் சேர்ந்த கறுப்பு நிற காய்களுடன் ஆடிய அரவிந்த் சிதம்பரம் சீனாவின் வெய் யீ உடன் மோதி வெற்றி பெற்றார்.
இதையடுத்து, அரவிந்த் சிதம்பரம் 6 புள்ளிகளுடன் சாம்பியன் பட்டம் வென்றார். அனிஷ் கிரி 5 புள்ளிகளுடன் 2வது இடத்திலும், பிரக்ஞானந்தா 4.5 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளார்.
Next Story
×
X