search icon
என் மலர்tooltip icon

    விளையாட்டு

    அடுத்த பயணத்தை இனி தொடங்க வேண்டும்-  சென்னை திரும்பிய அஸ்வின் பேட்டி
    X

    அடுத்த பயணத்தை இனி தொடங்க வேண்டும்- சென்னை திரும்பிய அஸ்வின் பேட்டி

    • சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு அறிவித்த அஸ்வின் இன்று சென்னை வந்தடைந்தார்.
    • ஆஸ்திரேலியாவில் இருந்து சென்னை திரும்பிய அஸ்வினுக்கு விமான நிலையத்தில் ரசிகர்கள் திரண்டு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 3-வது டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் நடைபெற்றது. இந்த போட்டி 2-வது நாள் மட்டுமே முழுமையாக நடைபெற்றது. மற்ற 4 நாட்களுமே மழையால் அடிக்கடி பாதிக்கப்பட்டது. 5-வது நாளான நேற்றைய ஆட்டமும் மழையால் பாதிக்கப்பட்டது. இதனையடுத்து ஆட்டம் டிராவில் முடிந்ததாக அறிவிக்கப்பட்டது.

    இந்த போட்டி முடிந்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த அஸ்வின், சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். மேலும் சக வீரர்களுக்கும், பிசிசிஐ-க்கும் நன்றி தெரிவித்தார். இது அவரது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    அஸ்வின் குறித்து முன்னாள் மற்றும் இன்னாள் கிரிக்கெட் வீரர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் என பலரும் பாராட்டி தங்களது கருத்து பகிர்ந்தனர்.

    இந்த நிலையில், சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு அறிவித்த அஸ்வின் இன்று சென்னை வந்தடைந்தார். ஆஸ்திரேலியாவில் இருந்து சென்னை திரும்பிய அஸ்வினுக்கு விமான நிலையத்தில் ரசிகர்கள் திரண்டு உற்சாக வரவேற்பு அளித்தனர். இதையடுத்து மேற்கு மாம்பலத்தில் உள்ள இல்லத்திற்கு சென்ற அஸ்வினுக்கு உறவினர்கள், ரசிகர்கள் என அனைவரும் திரண்டு மேள தாளங்களுடன் வரவேற்பு அளித்தனர்.


    இதன்பின் செய்தியாளர்களை சந்தித்த அஸ்வின் கூறியதாவது:-

    கிரிக்கெட்டில் எனது பயணம் தொடர்ந்து இருக்கும். அடுத்த பயணத்தை இனி தொடங்க வேண்டும். இவ்வளவு வரவேற்பு இருக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. இனி சிறிது நாட்களுக்கு எதுவும் செய்யாமல் சும்மா இருக்க வேண்டும். சும்மா இருப்பது கடினம் தான் என்றார்.



    Next Story
    ×