என் மலர்
கிரிக்கெட் (Cricket)

விவாகரத்து வழங்கிய நீதிமன்றம்: 'சுகர் டாடி'யாக மாறிய சாஹல் - வைரலாகும் வீடியோ
- சாஹலின் பெயரை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து தனஸ்ரீ நீக்கினார்.
- தனஸ்ரீ வெர்மாவுக்கு ரூ. 4.75 கோடியை சாஹல் ஜீவமான்சமாக வழங்க உள்ளார்.
இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சாஹல், கடந்த 2020-ம் ஆண்டு தனஸ்ரீ என்பவரை திருமணம் செய்து கொண்டார். மாடலிங்கில் ஈடுபட்டு வந்த தனஸ்ரீ, அடுத்தடுத்து கான்சர்ட்-களில் பாடகியாக அறிமுகமாகினார். இதன் உச்சமாக கடந்த ஆண்டு ஜூலை மாதம் பிரபல தொலைக்காட்சி ஒன்றில் நடன நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்கும் வாய்ப்பு தனஸ்ரீ-க்கு கிடைத்தது.
தனஸ்ரீயின் நடவடிக்கைகள் சாஹலுக்கு பிடிக்கவில்லை என்று கூறப்பட்டு வந்த நிலையில், மனைவி தனஸ்ரீயை விவகாரத்து செய்யப் போவதாக தொடர்ச்சியாக தகவல்கள் வெளியாகி வந்தது. ஆனால் பல்வேறு தருணங்களிலும் தனஸ்ரீ-க்கு ஆதரவாக சாஹல் பேசிய வீடியோக்கள் வெளியாகின.
ஆனால் 2023-ம் ஆண்டிலேயே சாஹலின் பெயரை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து தனஸ்ரீ நீக்கினார். இருப்பினும் விவாகரத்து குறித்து எந்த வித அதிகாரபூர்வ அறிவிப்பும் வெளிவராமல் இருந்தது.
இதனையடுத்து சில நாட்களுக்கு முன்னர் இருவரும் மும்பையில் உள்ள பாந்த்ரா குடும்ப நீதிமன்றத்தில் ஆஜராகி பரஸ்பர விவகாரத்து பெற்றனர். அதிகாரபூர்வ விவாகரத்து ஆணையை குடும்ப நல நீதிமன்றம் இன்று வழங்கியது.
இந்நிலையில் முன்னாள் மனைவி தனஸ்ரீ வெர்மாவுக்கு ரூ. 4.75 கோடியை கிரிக்கெட் வீரர் யுவேந்திர சாஹல் ஜீவமான்சமாக வழங்க உள்ளதாக, விவாகரத்து வழக்கில் மும்பை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. இதில் ரூ.2.37 கோடி கொடுக்கப்பட்டுள்ளது. விவாகரத்து ஆணை வழங்கப்பட்ட பிறகு மீதமுள்ள தொகையை சாஹல் செலுத்துவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று குடும்ப நலநீதிமன்றத்திற்கு வருகை தந்த சாஹல் "Be Your Own Sugar Daddy" என்ற வாசகம் பொருந்திய டி- ஷர்ட் அணிந்து வந்திருந்தார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
பாலியல் உறவு, நட்பு போன்றவற்றுக்கு ஈடாக பெண் ஒருவருக்கு பணம், பரிசுகள் போன்றவற்றை வழங்கும் வயதான பணக்கார ஆணை சுகர் டாடி என்று குறிப்பிடுகிறார்கள்.