என் மலர்
கிரிக்கெட் (Cricket)

2025 ஐ.பி.எல். தொடரில் எடை குறைந்த பேட்டை பயன்படுத்த எம்.எஸ்.தோனி திட்டம்

- எம்.எஸ்.தோனிக்கு சமீபத்தில் 1230 கிராம் எடையுள்ள 4 பேட்கள் டெலிவரி செய்யப்பட்டது.
- முன்னதாக எம்.எஸ்.தோனி 1250 முதல் 1300 கிராம் வரை எடையுள்ள பேட்டை பயன்படுத்தி வந்தார்.
18-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி மார்ச் 22-ந்தேதி தொடங்கி மே 25-ந்தேதி வரை நடக்கிறது. 5 முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தொடக்க ஆட்டத்தில் மும்பையை சந்திக்கிறது. மார்ச் 23-ம் தேதி சேப்பாக்கம் மைதானத்தில் இந்த ஆட்டம் நடக்கிறது.
இந்த ஐ.பி.எல். சீசனில் 43 வயதான எம்.எஸ்.தோனி எடை குறைந்த பேட்டை பயன் படுத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தனது மட்டையின் எடையை சுமார் 10 முதல் 20 கிராம் வரை அவர் குறைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அவருக்கு சமீபத்தில் 1230 கிராம் எடையுள்ள 4 பேட்கள் டெலிவரி செய்யப்பட்டது. கடந்த ஐபிஎல் சீசன் வரை எம்.எஸ்.தோனி 1250 முதல் 1300 கிராம் வரை எடையுள்ள பேட்டை பயன்படுத்தி வந்தார்.
இந்திய அணியின் வெற்றிகரமான கேப்டன் டோனி ஆவார். 2 உலக கோப்பை மற்றும் ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபியை வென்றுக் கொடுத்தார். ஐ.பி.எல்.லில் அவர் தலைமையில் சி.எஸ்.கே. 5 கோப்பையை வென்றது குறிப்பிடத்தக்கது.