என் மலர்
கிரிக்கெட் (Cricket)

நாங்கள் தொழில்முறை கிரிக்கெட் வீரர்கள் போல் களத்தில் செயல்படவில்லை: ஹர்திக் பாண்ட்யா
- நாங்கள் ஒரு தொழில்முறை கிரிக்கெட் வீரர்கள் போல் களத்தில் செயல்படவில்லை.
- பீல்டிங்கில் சொதப்பியதால் 20 முதல் 25 ரன்கள் கூடுதலாக குஜராத் எடுத்துவிட்டது.
அகமதாபாத்:
அகமதாபாத்தில் நடைபெற்ற 9வது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை 36 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது குஜராத் டைட்டன்ஸ் அணி.
இந்நிலையில், குஜராத் அணிக்கு எதிரான தோல்வி குறித்து மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா கூறியதாவது:
நாங்கள் எந்த இடத்தில் தவறு செய்தோம் என்பதை பட்டியலிடுவது என்பது மிகவும் கடினம். ஏனென்றால் நாங்கள் பல தவறுகளை செய்தோம்.
நாங்கள் ஒரு தொழில்முறை கிரிக்கெட் வீரர்கள் போல் களத்தில் செயல்படவில்லை. பீல்டிங்கில் சொதப்பியதால் 20 முதல் 25 ரன்கள் கூடுதலாக குஜராத் அணியை அடிக்க விட்டுவிட்டோம்.
குஜராத் தொடக்க வீரர்கள் பவர் பிளேவில் சிறப்பாக விளையாடி ரன்களைச் சேர்த்தார்கள். குஜராத் அணி தங்களுக்கு தேவையான இலக்கை நிர்ணயித்து எங்களை கடும் நெருக்கடியில் ஆழ்த்தினர்.
தற்போது ஐ.பி.எல். தொடர் ஆரம்ப கட்டத்தில் தான் இருக்கின்றது. அதே சமயம், எங்கள் அணியின் பேட்ஸ்மேன்களும் ரன்களை குவிக்க வேண்டும். அவர்கள் விரைவில் அதை செய்வார்கள் என நான் நம்புகிறேன்.
நான் அதிக அளவு பந்து வீசினேன். அப்போது பந்து ஆடுகளத்தில் நின்று வருகிறது என்பதை குஜராத் வீரர்கள் கவனித்திருப்பர். அந்த வகை பந்துகளை அடிப்பது மிகவும் கடினம். ஏனென்றால் ஆடுகளத்தில் நிலையான பவுன்ஸ் இல்லை. இதனால் பேட்ஸ்மேன்களுக்கு கடும் நெருக்கடி ஏற்படுகிறது என தெரிவித்தார்.