என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    ஐ.பி.எல். விருது பாவங்கள்.. இப்படியே போனா நல்லது இல்ல.. அஸ்வின் ஆதங்கம்
    X

    ஐ.பி.எல். விருது பாவங்கள்.. இப்படியே போனா நல்லது இல்ல.. அஸ்வின் ஆதங்கம்

    • வீடியோவில் ஐ.பி.எல். விருதுகள் பற்றி பேசியுள்ளார்.
    • எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் நடைபெறுகிறது.

    ஐ.பி.எல். 2025 கிரிக்கெட் தொடர் கடந்த 22ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. லீக் சுற்றுப் போட்டிகள் நடைபெற்று வரும் நிலையில், இன்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டி சென்னையில் உள்ள சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் நடைபெறுகிறது.

    இந்த சீசனில் முன்னாள் இந்திய அணி வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். போட்டிகளை தவிர்த்து சமூக வலைதளங்களில் கிரிக்கெட் பற்றி பேசுவதை அஸ்வின் வாடிக்கையாக கொண்டிருக்கிறார். அந்த வகையில், அஸ்வின் சமீபத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில் ஐ.பி.எல். விருதுகள் பற்றி பேசியுள்ளார்.

    அப்போது, "ஐ.பி.எல். தொடர்களில் போட்டி முடிந்த பிறகு நடைபெறும் விருது வழங்கும் விழாக்களில் பத்து விருதுகள் வரை வழங்கப்படுகிறது. இவற்றில் இரு அணி வீரர்கள் சமபங்கு அளவுக்கு விருதுகளை பெற்று வருகின்றனர். எனினும், ஒரு பந்துவீச்சாளர் சிறப்பாக பந்துவீசினால் கூட அவருக்கு ஒரு விருது வழங்கப்படுவதில்லை.

    சூப்பர் ஸ்டிரைக், சூப்பர் ஃபோர், சூப்பர் சிக்ஸ் என எல்லாவற்றுக்கும் விருது வழங்கப்படுகிறது. ஆனால் சூப்பர் பந்துக்கான விருது வழங்கப்படுவதில்லை. ஒரு காலத்தில் அதிவேக பந்துவீசியதற்கு விருது வழங்கப்பட்டது. அந்த பந்து சிக்சருக்கு அடிக்கப்பட்டால் கூட அந்த பந்துவீச்சாளருக்கு அதிவேக பந்து வீசியதற்கான விருது வழங்கப்பட்டுள்ளது.

    இதே நிலை நீடித்தால் பந்துவீச்சாளர் பந்துடன் மைதானத்தை விட்டு ஓடும் காலம் வெகுதூரம் இல்லை. நாங்கள் பந்துவீசாமால் உங்களால் எப்படி அதனை அடித்துவிட முடியும்?," என்று ஆதங்கத்தை பகிர்ந்து கொண்டார்.

    Next Story
    ×