என் மலர்
ஐ.பி.எல்.(IPL)

அதிரடி காட்டிய நிதிஷ் ராணா.. பிளான் போட்டு தூக்கிய அஸ்வின் - வைரல் வீடியோ
- நிதிஷ் ராணா அதிரடியாக ஆடி 81 ரன்கள் குவித்தார்.
- எம்.எஸ்.தோனி சிறப்பான ஸ்டம்பிங் செய்து நிதிஷ் ராணா விக்கெட்டை தூக்கினார்.
ஐ.பி.எல். 2025 சீசனின் 11-வது லீக் போட்டி கவுகாத்தியில் நடைபெற்றது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற சி.எஸ்.கே. பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் களமிறங்கிய ராஜஸ்தான் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 182 ரன்கள் எடுத்தது. நிதிஷ் ராணா அதிரடியாக ஆடி 81 ரன்கள் குவித்தார்.
இதையடுத்து, 183 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சிஎஸ்கே அணி 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 6 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி வெற்றி பெற்றது.
இப்போட்டியில் அதிரடியாக விளையாடிய நிதிஷ் ராணா அரைசதத்தை கடந்து சதத்தை நெருங்கி கொண்டிருந்தார்.
அஸ்வின் வீசிய 12 ஆவது ஓவரில் ஒரு சிக்ஸ், ஒரு போர் என அதிரடியாக ஆரம்பித்தார் நிதிஷ் ரானா. அந்த ஓவரின் 3 ஆவது பந்தை வீசும்போது நிதிஷ் ரானா இறங்கி வந்து அடிக்க முயன்றதை முன்பே கணித்த அஸ்வின் பந்தை வைடாக வீசினார். அப்போது எம்.எஸ்.தோனி சிறப்பான ஸ்டம்பிங் செய்து நிதிஷ் ராணா விக்கெட்டை தூக்கினார்.
200 ரன்களுக்கு மேல் விளாசும் வாய்ப்பிருந்த ராஜஸ்தான் அணி 181 ரன்கள் அடித்ததற்கு அஸ்வின் எடுத்த இந்த விக்கெட் முக்கிய காரணம் என்றால் அது மிகையாகாது.