என் மலர்tooltip icon

    ஐ.பி.எல்.(IPL)

    அவர் சிறந்த பேட்ஸ்மேன்.. ரியான் பராக்கை புகழ்ந்த ராகுல் டிராவிட்
    X

    அவர் சிறந்த பேட்ஸ்மேன்.. ரியான் பராக்கை புகழ்ந்த ராகுல் டிராவிட்

    • ரியான் பராக் 4வது வரிசையில் இறங்கி மிகச் சிறப்பாகச் செயல்பட்டார்.
    • ரியான் பராக் எந்த நிலையிலும் பேட்டிங் செய்யக்கூடிய திறன் கொண்டவர்.

    நடப்பு ஐபிஎல் தொடரின் முதல் 3 போட்டிகளுக்கு மட்டும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக ரியான் பராக் நியமிக்கப்பட்டார்.

    ராஜஸ்தான் அணியின் முதல் 3 போட்டி அசாம் மாநிலம் கவுகாத்தி மைதானத்தில் நடைபெறுவதால் அசாம் மாநிலத்தை சேர்ந்த ரியான் பராக் கேப்டனாக நியமிக்கப்பட்டவுள்ளார். காயம் காரணமாக சாம்சன் பேட்ஸ்மேனாக (இம்பாக்ட் பிளேயர்) மட்டும் இந்த போட்டிகளில் விளையாடுவார் என்று அறிவிக்கப்ட்டது.

    அதன்படி ரியான் பராக் கேப்டனாக செயல்பட்ட முதல் 2 போட்டிகளில் ராஜஸ்தான் அணி தோல்வியை தழுவியது. தற்போது 3 ஆவது போட்டியில் இன்று சென்னை அணியை கவுகாத்தி மைதானத்தில் ராஜஸ்தான் எதிர்கொள்கிறது.

    2024 இல் 4 ஆம் வரிசையில் களமிறங்கி சிப்பாராக விளையாடிய ரியான் பராக் இந்தாண்டு 3 ஆம் வரிசையில் களமிறங்கி 4 மற்றும் 25 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார்.

    இந்நிலையில், ரியான் பராக் குறித்து பேசிய ராஜஸ்தான் அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட், "ரியான் பராக் 4 ஆம் வரிசையில் இருந்து 3 ஆம் வரிசைக்கு பதவி உயர்வு பெற்றுள்ளார். ரியான் பராக் எங்கள் சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவர்.

    நேர்மையாகச் சொல்லப் போனால், ரியான் பராக் எவ்வளவுக்கு எவ்வளவு பந்துகள் விளையாடுகிறாரோ அவ்ளவுக்கு அவ்வளவு அணிக்கு நல்லது. ரியான் பராக் 4வது வரிசையில் இறங்கி மிகச் சிறப்பாகச் செயல்பட்டார் என்பது எங்களுக்குத் தெரியும். அனால் அவருக்கு பேட்டிங் செய்ய நிறைய நேரம் தருவதற்காக 3 ஆம் இடத்தில தற்போது இறங்குகிறார்.

    அவருக்கு அதிக நேரம் கிடைத்தால், அவர் அதிக ரன்கள் எடுக்க முடியும், அது அணிக்கு பயனளிக்கும். அவர் எந்த நிலையிலும் பேட்டிங் செய்யக்கூடிய திறன் கொண்டவர்" என்று தெரிவித்தார்.

    Next Story
    ×