என் மலர்
ஐ.பி.எல்.

இம்பாக்ட் பிளேயர் விதியால் ஆல்ரவுண்டர்களுக்கு பாதிப்பு- ஹர்திக் பாண்ட்யா
- 2023-ம் ஆண்டு இம்பேக்ட் பிளேயர் விதிமுறை (தாக்கத்தை ஏற்படுத்தும் வீரர்) அமல்படுத்தப்பட்டது.
- ஆல்ரவுண்டர்கள் அவர்களது இடத்தைப் பிடிக்க வேண்டுமானால் கூடுதலாக உழைக்க வேண்டும்.
மும்பை:
ஐ.பி.எல். போட்டியில் கடந்த 2023-ம் ஆண்டு இம்பேக்ட் பிளேயர் விதிமுறை (தாக்கத்தை ஏற்படுத்தும் வீரர்) அமல்படுத்தப்பட்டது. 2027 வரை இந்த விதி இருக்கும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது.
பந்துவீச்சு அல்லது பேட்டிங்குக்கு யாராவது ஒரு வீரரை ஆட்டத்தின் ஒரு பகுதியில் மாற்றிக் கொள்ளலாம் என்று இந்த விதி கூறுகிறது.
இந்த விதிமுறை குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. இந்த நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா இது தொடர்பாக கூறியதாவது:-
இம்பேக்ட் பிளேயர் விதி முறையால் ஆல்ரவுண்டர்கள் பாதிக்கப்படுகிறார்கள். தற்போதைய சூழ்நிலையில் நீங்கள் ஒருநாள் போட்டி ஆல்ரவுண்டராக இல்லையெனில் உங்களது இடத்தைப் பிடிப்பது கடினமாக இருக்கிறது. காலப்போக்கில் இது எல்லாம் மாறுமா அல்லது இல்லையா என்பதைப் பொறுத்து இருந்துதான் பார்க்க வேண்டும்.
ஆனால், நிச்சயமாக ஆல்ரவுண்டர்கள் அவர்களது இடத்தைப் பிடிக்க வேண்டுமானால் கூடுதலாக உழைக்க வேண்டும்.
இவ்வாறு ஹர்திக் பாண்ட்யா கூறினார்.