என் மலர்
ஐ.பி.எல்.

ஐபிஎல் 2025: அக்ஷர் படேல் தலைமையில் களம் இறங்கும் டெல்லி கேப்பிட்டல்ஸ்- ஓர் பார்வை
- கே.எல். ராகுல் மிடில் ஆர்டர் வரிசையில் களம் இறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
- சுழற்பந்து வீச்சில் அக்ஷர் படேல், குல்தீப் யாதவ் நம்பிக்கை அளிக்கும் வகையில் உள்ளனர்.
ஒருமுறை கூட சாம்பியன் பட்டத்தை வெல்ல முடியாத நிலையில் அக்ஷர் படேலை கேப்டனாக நியமித்து டெல்லி கேப்பிட்டல்ஸ் இந்த சீசனை எதிர்கொள்கிறது.
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி விவரம்:-
பேட்ஸ்மேன்கள்
கே.எல். ராகுல், ஜேக் பிரேசர்-மெக்கர்க், கருண் நாயர், பாஃப் டு பிளிஸ்சிஸ், டொனோவன் பெரைரா, அபிஷேக் பொரேல், திரிஸ்டன் ஸ்டப்ஸ்.
ஆல்-ரவுண்டர்கள்
அக்சார் பட்டேல், சமீர் ரிஸ்வி, அஷுடோஷ் சர்மா, தர்ஷன் நல்கண்டே, விப்ராஜ் நிகம், அஜய் மண்டல், மண்வந்த் குமார், திரிபுரண விஜய், மாதவ் திவாரி.
பந்து வீச்சாளர்கள்
மிட்செல் ஸ்டார்க், டி.நடராஜன், மோகித் சர்மா, முகேஷ் குமார், துஷ்மந்தா சமீரா, குல்தீப் யாதவ்.
தொடக்க பேட்ஸ்மேன்கள்
கே.எல். ராகுல், மெக்கர்க், டூ பிளிஸ்சிஸ், ஸ்டப்ஸ் ஆகிய நான்கு தொடக்க பேட்ஸ்மேன்கள் உள்ளனர். கே.எல். ராகுல் மிடில் ஆர்டர் வரிசையில் களம் இறங்க ஆர்வம் காட்டுவதாக தெரிகிறது. இதனால் மெக்கர்க், டு பிளிஸ்சிஸ் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்க வாய்ப்புள்ளது. டு பிளிஸ்சிஸ் ஆர்சிபி, சிஎஸ்கே அணிகளுக்காக தொடக்க வீரராக களம் இறங்கியுள்ளார். இருவரும் வெளிநாட்டு வீரர்கள் ஒருவேளை இந்த ஜோடி சிறப்பாக விளையாட வில்லை என்றால் ஸ்டப்ஸ் களம் இறங்க வாய்ப்புள்ளது.
மிடில் ஆர்டர் வரிசை
மிடில் ஆர்டர் வரிசையில் கே.எல். ராகுல், பொரேல், கருண் நாயர், ஆல்ரவுண்டர் அக்சர் பட்டேல், சமீர் ரிஸ்வி, அஷுடோஸ் சர்மா உள்ளனர். ஆல்-ரவுண்டர்களில் தர்ஷன் நல்கண்டே, விப்ராஜ் நிகம், அஜய் மண்டல், மண்வந்த் குமார், திரிபுரண விஜய், மாதவ் திவாரி அனுபவம் இல்லாத வீரர்கள் இடம் பிடித்துள்ளனர்.
தொடக்க வீரர்கள் நல்ல தொடக்கம் கொடுத்தால் கருண் நாயர், கே.எல். ராகுல் அதை மிகப்பெரிய ஸ்கோராக மாற்ற வாய்ப்புள்ளது. ஒருவேளை இரண்டு மூன்று விக்கெட்டுகள் மளமளவென இழந்துவிட்டால் அணி சவாலை எதிர்கொள்ள வாய்ப்புள்ளது.
வேகப்பந்து வீச்சு
மிட்செல் ஸ்டார்க், டி. நடராஜன், மோகித் சர்மா, முகேஷ் குமார், துஷ்மந்தா சமீரா ஆகிய ஐந்து முன்னணி வீரர்களை கொண்டுள்ளது.
ஸ்டார்க், மோகித் சர்மா, டி. நடராஜன், முகேஷ் குமார் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவார்கள் என எதிர்பார்க்கலாம். ஆடும் லெவனில் மிட்செல் ஸ்டார்க், டி.நடராஜன், மோகித் சர்மா அல்லது முகேஷ் குமார் இடம் பிடிக்க வாய்ப்புள்ளது.
ஒருவேளை ஸ்டார்க் விளையாட முடியவில்லை என்றால் சமீரா களம் இறங்க வாய்ப்புள்ளது. எப்படி இருந்தாலும் வேகப்பந்து வீச்சில் ஆதிக்கம் செலுத்தும் ஒரு அணியாக இருக்கலாம்.
சுழற்பந்து வீச்சு
அக்ஷர் படேல், குல்தீப் என இரண்டு நட்சத்திர வீரர்களை மட்டும் நம்பி களம் இறங்க வேண்டிய நிலை.
வேகப்பந்து வீச்சு, சுழற்பந்து வீச்சில் சமநிலை பெற்ற நிலையில் இருந்தாலும், பேட்டிங்கில் எப்படி செயல்பட இருக்கிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.