என் மலர்
ஐ.பி.எல்.(IPL)

IPL 2025: 175+ டார்கெட் என்றால் பயம்... சேஸிங்கில் தொடர்ந்து சொதப்பும் சி.எஸ்.கே.
- 183 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சிஎஸ்கே அணி களமிறங்கியது.
- சென்னை சூப்பர் கிங்ஸ் அணி புள்ளிப்பட்டியலில் தற்போது 7வது இடத்தில் உள்ளது.
ஐ.பி.எல். 2025 சீசனின் 11-வது லீக் போட்டி கவுகாத்தியில் நடைபெற்றது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற சி.எஸ்.கே. பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் களமிறங்கிய ராஜஸ்தான் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 182 ரன்கள் எடுத்தது. நிதிஷ் ராணா அதிரடியாக ஆடி 81 ரன்கள் குவித்தார்.
இதையடுத்து, 183 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சிஎஸ்கே அணி 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 6 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி வெற்றி பெற்றது.
கடந்த போட்டியில் 197 ரன்கள் இலக்கை எட்டமுடியாமல் 50 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்த சிஎஸ்கே அணி இந்த போட்டியில் 183 ரன்கள் என்ற இலக்கை எட்டமுடியாத 6 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்துள்ளது.
தொடர்ந்து 2 போட்டிகளில் ஏற்பட்ட தோல்வியால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி புள்ளிப்பட்டியலில் தற்போது 7வது இடத்தில் உள்ளது.
2021 ஆம் ஆண்டுக்கு பின்பு 175 ரன்களுக்கு மேல் இலக்கு நிர்ணயிக்கப்பட்ட 9 ஆட்டங்களில் ஒன்றில் கூட சென்னை அணி வெல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.