என் மலர்tooltip icon

    ஐ.பி.எல்.(IPL)

    ஐபிஎல் 2025: ராஜஸ்தான் ராயல்ஸ்க்கு எதிராக கொல்கத்தா பந்து வீச்சு தேர்வு
    X

    ஐபிஎல் 2025: ராஜஸ்தான் ராயல்ஸ்க்கு எதிராக கொல்கத்தா பந்து வீச்சு தேர்வு

    • கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் சுனில் நரைன் இடம் பெறவில்லை.
    • மொயீன் அலி முதன்முறையாக கொல்கத்தா அணிக்காக களம் இறங்க உள்ளார்.

    ஐபிஎல் 2025 சீசனின் 6-வது போட்டி அசாம் மாநிலம் கவுகாத்தியில் இன்றிரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. இதில் ராஜஸ்தான் ராயல்ஸ்- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

    இந்த போட்டிக்கான டாஸ் 7 மணிக்கு சுண்டப்பட்டது. இதில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி கேப்டன் ரகானே டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார்.

    கொல்கத்தா முதல் போட்டியில் ஆர்சிபி-யிடம் தோல்வியடைந்தது. ராஜஸ்தான் ராயல்ஸ் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியிடம் தோல்வியடைந்தது. இதனால் இரண்டு அணிகளும் முதல் வெற்றிக்காக போராடும். இதனால் போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது.

    ராஜஸ்தான் ராயல்ஸ் அண விவரம்:-

    ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன், நிதிஷ் ராணா, ரியான் பராக், துருவ் ஜுரேல், ஹெட்மையர், வணிந்து ஹசரங்கா, ஆர்ச்சர், தீக்ஷனா, தேஷ்பாண்டே, சந்தீப் சர்மா

    கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி விவரம்:-

    டி காக், வெங்கடேஷ் அய்யர், ரகானே, ரிங்கு சிங், மொயீன் அலி, ரசல், ராமன்தீப் சிங், ஸ்பென்சர் ஜான்சன், வைபவ் அரோரா, ஹர்ஷித் ராணா, வருண் சக்ரவர்த்தி

    Next Story
    ×