என் மலர்
ஐ.பி.எல்.

ஆல் ஏரியாலயும் நான் கில்லி.. டெல்லி அணியில் நடுவரிசையில் களமிறங்கும் கேஎல் ராகுல்?
- கேஎல் ராகுல் தொடக்க வீரரில் இருந்து 7-வது வரிசை வரை களமிறங்கிய உள்ளார்.
- மனைவிக்கு குழந்தை பிறக்கவுள்ளதால், தொடக்கத்தில் சில போட்டிகளை ராகுல் தவறவிடுகிறார்.
ஐபிஎல் தொடரின் 18-வது சீசன் வருகிற 22-ந் தேதி தொடங்குகிறது. இந்த தொடருக்காக 10 அணிகளும் தீவிரமாக பயிற்சி செய்து வருகின்றனர். இந்த தொடரின் தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா- பெங்களூரு அணிகள் மோதவுள்ளது.
இந்நிலையில் டெல்லி அணியின் கேப்டனாக கேஎல் ராகுல் நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அந்த பதவியை அவர் நிராகரித்தார். மேலும் ஒரு வீரராக அணிக்கு பங்காற்ற விரும்புவதாகவும் தெரிவித்தார். அவரது மனைவிக்கு குழந்தை பிறக்கவுள்ளதால், தொடக்க போட்டிகளை தவறவிடுகிறார். இதனையடுத்து அக்ஷர் படேல் கேப்டனாக நியமிக்கப்பட்டார்.
இந்த நிலையில் கேல் ராகுல் பேட்டிங்கில் தொடக்க வீரராக களமிறங்காமல் நடுவரிசையில் களமிறங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அந்த அணியில் இடம் பெற்றிருந்த இங்கிலாந்து வீரர் ஹாரி ப்ரூக்-க்கு 2 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளதால் நடுவரிசையை சமாளிக்க கேஎல் ராகுல் அந்த வரிசையில் களமிறங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கேஎல் ராகுல் தொடக்க வீரரில் இருந்து 7-வது வரிசை வரை இந்திய அணிக்காக களமிறங்கி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.