search icon
என் மலர்tooltip icon

    ஐ.பி.எல்.

    ஐபிஎல் 2025: சாம்பியன் நோக்கி அழைத்துச் செல்வாரா ஷ்ரேயாஸ் அய்யர்- பஞ்சாப் கிங்ஸ் அணி ஓர் பார்வை...
    X

    ஐபிஎல் 2025: சாம்பியன் நோக்கி அழைத்துச் செல்வாரா ஷ்ரேயாஸ் அய்யர்- பஞ்சாப் கிங்ஸ் அணி ஓர் பார்வை...

    • ஷ்ரேயாஸ் அய்யர், ஷஷாங்க் சிங், மேக்ஸ்வெல், ஸ்டோய்னிஸ், ஓமர்சாய் என பலமான மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் உள்ளனர்.
    • வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டர் உள்பட 9 வேகப்பந்து வீச்சாளர்களை கொண்டுள்ளது.

    கடந்த முறை சாம்பியன் பட்டம் வென்ற ஷ்ரேயாஸ் அய்யரை மெகா ஏலத்தில் எடுத்து கேப்டனாக்கி, இந்த முறை சாம்பியன் பட்டம் வெல்லும் முனைப்பில் பஞ்சாப் கிங்ஸ் அணி உள்ளது.

    பேட்ஸ்மேன்கள்

    ஷ்ரேயாஸ் அய்யர், நேஹால் வதேரா, விஷ்னு வினோத், ஜோஷ் இங்கிலிஸ், ஹர்னூர் பன்னு, பைலா அவினாஷ், பிரப்சிம்ரன் சிங், ஷஷாங்க் சிங்

    ஆல்-ரவுண்டர்கள்

    மார்கஸ் ஸ்டோய்னிஸ், கிளென் மேக்ஸ்வெல், ஹர்ப்ரீத் பிரார், மார்கோ யான்சன், அஸ்மதுல்லா ஓமர்சாய், பிரியன்ஷ் ஆர்யா, ஆரோன் ஹர்டி, முஷீர் கான், சூர்யான்ஸ் ஷெட்ஜ்

    பந்து வீச்சாளர்கள்

    அர்ஷ்தீப் சிங், சாஹல், வைஷாக் விஜய் குமார், யாஷ் தாகூர், லூக்கி பெர்குஷன், குல்தீப் சென், சேவியர் பார்ட்லெட், பிரவின் துபே

    தொடக்க பேட்ஸ்மேன்கள்

    ஜோஷ் இங்கிலிஸ், பிரப்சிம்ரன் சிங் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்க வாய்ப்புள்ளது. அல்லது புதுமுகங்களை பரிசோதனை முயற்சியில் களம் இறக்கி பார்க்கலாம்.

    மிடில் ஆர்டர் வரிசை

    மிடில் ஆர்டரில் ஷ்ரேயாஸ் அய்யர், ஷஷாங்க் சிங், மார்கஸ் ஸ்டோய்னிஸ், மேக்ஸ்வெல், அஸ்மதுல்லா ஓமர்சாய் ஆகிய நட்சத்திர வீரர்களை கொண்டுள்ளது. முஷீர் கான் முதல்தர மற்றும் லிஸ்ட் ஏ போட்டிகளில் சிறப்பாக விளையாடியவர். தொடக்கம் சரியாக அமைந்துவிட்டால், மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் துவம்சம் செய்ய வாய்ப்புள்ளது.

    சுழற்பந்து வீச்சு

    சுழற்பந்து வீச்சில் சாஹல், ஹர்ப்ரீத் பிரார் முக்கிய பங்கு வகிப்பார்கள். இவர்களுக்கு துணையாக பிரவீன் துபே, மேக்ஸ்வெல் உள்ளனர்.

    வேகப்பந்து வீச்சு

    வேகப்பந்து வீச்சில் அர்ஷ்தீப் சிங் முக்கிய பங்கு வகிப்பார். இவருடன் வைஷாக் விஜய் குமார், யாஷ் தாகூர், லூக்கி பெர்குஷன், குல்தீப் சென், சேவியர் பார்ட்லெட், ஸ்டோய்னிஸ், யான்சன், ஆரோன் ஹர்டி என மிகப்பெரிய பட்டாளமே உள்ளது.

    வெளிநாட்டு வீரர்கள்

    ஜோஷ் இங்கிலிஸ், மார்கஸ் ஸ்டோய்னிஸ், கிளென் மேக்ஸ்வெல், மார்கோ யான்சன், அஸ்மதுல்லா ஓமர்சாய், ஆரோன் ஹார்டி, சேவியர் பார்ட்லெட் ஆகியோர் உள்ளனர். இதில் மார்கஸ் ஸ்டோய்னிஸ், கிளென் மேக்ஸ்வெல், அஸ்மதுல்லா ஓமர்சாய் ஆடும் லெவனில் களம் இறங்க வாய்ப்புள்ளது. ஜோஷ் இங்கிலிஸ் மற்றும யான்சனை இம்பேக்ட் பிளேயர் முறையில் களம் இறக்க வாய்ப்புள்ளது.

    பஞ்சாப் கிங்ஸை ஷ்ரேயாஸ் அய்யர் எப்படி என சமநிலை அணியாக கொண்டு வருகிறார் என்பதுதான் முக்கியமானது.

    Next Story
    ×