என் மலர்tooltip icon

    ஐ.பி.எல்.(IPL)

    பந்துவீச்சாளர்களுக்கு இழைக்கப்படும் அநீதி: ஆட்ட நாயகன் விருது வென்ற ஷர்துல் தாக்குர்
    X

    பந்துவீச்சாளர்களுக்கு இழைக்கப்படும் அநீதி: ஆட்ட நாயகன் விருது வென்ற ஷர்துல் தாக்குர்

    • லக்னோ அணி 16.1 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 193 ரன்களை எடுத்து அபார வெற்றி பெற்றது.
    • ஐ.பி.எல். தொடரில் ஷர்துல் தாக்குர் 100 விக்கெட் எடுத்தோர் பட்டியலில் இணைந்துள்ளார்.

    ஐதராபாத்:

    ஐ.பி.எல். 2025 தொடரின் 7-வது லீக் போட்டி ஐதராபாத்தில் நேற்று நடந்தது. இதில் சன்ரைசர்ஸ் ஐதராபாத், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதின.

    முதலில் பேட் செய்த ஐதராபாத் 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 190 ரன்கள் எடுத்தது. டிராவிஸ் ஹெட் அதிகபட்சமாக 47 ரன்கள் எடுத்தார்.

    லக்னோ அணி சார்பில் ஷர்துல் தாகூர் 4 விக்கெட் வீழ்த்தினார். தொடர்ந்து ஆடிய லக்னோ அணி 16.1 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 193 ரன்களை எடுத்து அபார வெற்றி பெற்றது. 4 விக்கெட் வீழ்த்திய ஷர்துல் தாக்குருக்கு ஆட்ட நாயகன் விருது அளிக்கப்பட்டது.

    ஷர்துல் தாக்குர் ஐ.பி.எல். தொடரில் 100 விக்கெட்களை வீழ்த்தி புதிய சாதனை படைத்துள்ளார். அத்துடன், நடப்பு ஐ.பி.எல். தொடரில் ஊதா நிற தொப்பியையும் தன்வசப்படுத்தி உள்ளார்.

    இந்நிலையில், ஆட்ட நாயகன் விருது பெற்றபோது ஷர்துல் தாக்குர் அளித்த பேட்டியில் கூறியதாவது:

    ஐ.பி.எல்லில் எந்த அணியாலும் எடுக்கப்படுவேன் என நம்பவில்லை. ஐ.பி.எல் சமயத்தில் என்ன செய்யலாம் என திட்டமிட்டு கவுண்ட்டி கிரிக்கெட்டில் ஆட ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டேன். அதன்பிறகுதான் ரஞ்சி டிராபியில் ஆடிக்கொண்டிருந்தபோது ஜாகீர்கானிடமிருந்து அழைப்பு வந்தது. லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி என்னைத்தான் முதலில் அணுகியது. அதனால் நான் அதை ஏற்றுக்கொண்டேன்.

    கிரிக்கெட்ல நல்ல நாட்களும் இருக்கும், கெட்ட நாட்களும் இருக்கும். அதையெல்லாம் கடந்துதான் போகணும். ஸ்கோர்ஷீட்டில் இருப்பது எப்பவும் நல்லதுதான், ஆனா ஆட்டத்தை வெல்வது எனக்கு முக்கியம்.

    நான் ஏதாவது ஒரு விஷயத்தைச் செய்துகிட்டே இருக்கேன். விக்கெட் பத்தியோ, ரன் பத்தியோ நான் அதிகம் பார்க்கல. மேட்ச் வின்னிங் பெர்பார்மென்சை மட்டுமே காட்ட விரும்புகிறேன்.

    பேட்ஸ்மேன்களுக்கு சாதகமான வகையில் பிட்ச் தயார் செய்யப்படுவது பந்துவீச்சாலர்களுக்கு இழைக்கப்படும் அநீதி.

    அவங்க பவுலர்களை ரொம்பவே தாக்குறாங்க. அதனால அவங்களை ஏன் கடுமையாக தாக்கக்கூடாது? கூட்டா அவங்களை எதிர்த்துப் போராடுவதுதான் திட்டம். ஆரம்பத்துலயே விக்கெட் எடுத்தா நல்லா விளையாடுவோம்னு நினைத்தோம் என தெரிவித்தார்.

    Next Story
    ×