search icon
என் மலர்tooltip icon

    ஐ.பி.எல்.

    போட்டி அட்டவணையை மாற்றியமைக்க ஐபிஎல் நிர்வாகத்திற்கு கொல்கத்தா போலீஸ் வேண்டுகோள்
    X

    போட்டி அட்டவணையை மாற்றியமைக்க ஐபிஎல் நிர்வாகத்திற்கு கொல்கத்தா போலீஸ் வேண்டுகோள்

    • கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் ஏப்ரல் 6ஆம் தேதி கேகேஆர்-லக்னோ போட்டி நடைபெற இருக்கிறது.
    • ஏப்ரல் 6ஆம் தேதி ராம நவமி கொண்டாடப்படுவதால் போலீஸ் பாதுகாப்பு வழங்க சிரமம் ஏற்படுவதால் வேண்டுகோள்.

    ஐபிஎல் 2025 சீசன் டி20 கிரிக்கெட் திருவிழா நாளைமறுதினம் கொல்கத்தாவில் தொடங்குகிறது. ஈடன் கார்டனில் நடைபெறும் முதல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

    ஏப்ரல் 6ஆம் தேதி கொல்கத்தா நைட் ரைடர்ஸ்- லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் இடையிலான ஆட்டம் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற இருக்கிறது.

    ஏப்ரல் 6ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதால் இரண்டு போட்டிகள் நடைபெறும். மதியம் 3.30 போட்டி இங்கு நடைபெறுகிறது.

    அன்றைய தினம் ராம நவமியாகும். ராம நவமி தினத்தில் கொல்கத்தாவில் பாஜக பேரணி நடத்த இருப்பதாக ஏற்கனவே தெரிவித்துள்ளது. இதனால் கொல்கத்தா முழுவதும் அதிக அளவில் போலீசார் குவிக்கப்பட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

    அதே தினத்தில் போட்டி நடைபெற இருப்பதால் பாதுகாப்பிற்கு போலீஸ் குவிக்க முடியாத நிலை ஏற்படும். இதனால் 6ஆம் தேதி நடைபெற இருக்கும் போட்டியை மற்றொரு தேதிக்கு மாற்றி வைக்க ஐபிஎல் நிர்வாகத்திற்கு கொல்கத்தா போலீசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    Next Story
    ×