search icon
என் மலர்tooltip icon

    ஐ.பி.எல்.

    உபி முதல் மந்திரி யோகி ஆதித்யநாத்தை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்ற லக்னோ அணி
    X

    உபி முதல் மந்திரி யோகி ஆதித்யநாத்தை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்ற லக்னோ அணி

    • ஐ.பி.எல்.-ன் 18-வது சீசன் வருகிற 22-ம் தேதி தொடங்குகிறது.
    • ஐபிஎல் தொடரை முன்னிட்டு லக்னோ அணி உபி முதல் மந்திரியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

    லக்னோ:

    ஐ.பி.எல்.-ன் 18-வது சீசன் வருகிற 22-ம் தேதி தொடங்குகிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, கொல்கத்தா நைட் ரைட்சர்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத், ராஜஸ்தான் ராயல்ஸ், பஞ்சாப் கிங்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ், குஜராத் டைட்டன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் ஆகிய 10 அணிகள் கலந்து கொள்கின்றன.

    கொல்கத்தாவில் நடைபெறும் முதல் லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி, பெங்களூரு ராயல் சேலஞ்சர்சை எதிர்கொள்கிறது.

    இந்த நிலையில், ஐபிஎல் தொடரை முன்னிட்டு லக்னோ அணி உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா, கேப்டன் ரிஷப் பண்ட் மற்றும் அணி வீரர்கள் உத்தரபிரதேச முதல் மந்திரி யோகி ஆதித்யநாத்தை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

    மேலும் லக்னோ அணி வீரர்கள் கையெழுத்திட்ட மினி பேட்டை யோகி ஆதித்யநாத்திற்கு பரிசாக லக்னோ அணி உரிமையாளரும் கேப்டன் ரிஷப் பண்டும் இணைந்து வழங்கினார். இது தொடர்பான புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

    Next Story
    ×