என் மலர்
ஐ.பி.எல்.(IPL)

Impact Player விதி எனக்கு உதவுகிறதுதான்.. ஆனால்.. தோனி ஓபன் டாக்
- நான் இம்பேக்ட் பிளேயர் இல்லை.
- நான் விளையாட்டில் ஈடுபட வேண்டும்.
ஐபிஎல் தொடரின் 18-வது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு போட்டியும் இறுதி ஓவர்கள் வரை சென்று ரசிகர்களுக்கு விருது படைக்கிறது. இந்த சீசனில் இம்பேக்ட் பிளேயர் விதி அமலில் இருக்காது என பல்வேறு தகவல்கள் வந்தது. ஆனால் 2027 வரை இந்த விதி இருக்கும் என பிசிசிஐ தெரிவித்தது.
இந்நிலையில் இம்பேக்ட் பிளேயர் விதி குறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனி கருத்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
இம்பேக்ட் பிளேயர் விதியை அறிமுகப்படுத்துவது குறித்த பேச்சுவார்த்தை வந்தபோது, ஐபிஎல் தற்போது நல்ல நிலையில் உள்ளது. இதற்குமேல் அதனை மேம்படுத்த வேண்டிய அவசியம் இல்லை. போட்டிகளும் விறுவிறுப்பாகவே உள்ளன என கூறினேன்.
ஆனாலும் அந்த விதி அமலுக்கு வந்தது. அந்த விதி எனக்கு உதவுகிறதுதான். ஆனாலும் நான் பேட்டிங்கும் செய்கிறேன். கீப்பிங்கும் செய்கிறேன். எனவே நான் இம்பேக்ட் பிளேயர் இல்லை. நான் விளையாட்டில் ஈடுபட வேண்டும்.
இவ்வாறு எம்எஸ் தோனி கூறினார்.