என் மலர்tooltip icon

    ஐ.பி.எல்.(IPL)

    இஷான் கிஷன் அதிரடி சதம்: ஐதராபாத் அணி 286 ரன்கள் குவிப்பு
    X

    இஷான் கிஷன் அதிரடி சதம்: ஐதராபாத் அணி 286 ரன்கள் குவிப்பு

    • முதலில் ஆடிய ஐதராபாத் 20 ஓவரில் 286 ரன்களைக் குவித்தது.
    • இஷான் கிஷன் அதிரடியாக ஆடி சதமடித்து அசத்தினார்.

    ஐதராபாத்:

    ஐபிஎல் 2025 சீசனின் 2வது போட்டி ஐதராபாத்தில் உள்ள ராஜீவ்காந்தி மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் ராஜஸ்தான் ராயல்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதுகின்றன. இதற்கான டாஸ் சுண்டப்பட்டது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் ரியான் பராக் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார்.

    அதன்படி, சன்ரைசர்ஸ் ஐதராபாத் முதலில் களமிறங்கியது. அபிஷேக் சர்மா, டிராவிஸ் ஹெட் ஆரம்பம் முதலே அதிரடியாக ஆடினர். பவர்பிளே முடிவில் ஐதராபாத் 94 ரன்களைக் குவித்தது.

    சிறப்பாக அடிய டிராவிஸ் ஹெட் அரை சதமடித்து 67 ரன்னில் அவுட்டானார். அபிஷேக் சர்மா 24 ரன்னும், நிதிஷ் ரெட்டி 30 ரன்னும், கிளாசன் 34 ரன்னும் எடுத்தனர்.

    ஆரம்பம் முதல் அதிரடியாக ஆடிய இஷான் கிஷன் 45 பந்துகளில் 6 சிக்சர், 10 பவுண்டரி உள்பட சதமடித்து அசத்தினார்.

    இறுதியில், ஐதராபாத் அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 286 ரன்களைக் குவித்தது. இஷான் கிஷன் 106 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.

    Next Story
    ×