என் மலர்
ஐ.பி.எல்.(IPL)

கோலி உள்பட 2 பேரை கட்டுப்படுத்தினால் சிஎஸ்கே வெற்றி பெற அதிக வாய்ப்பு- சிஎஸ்கே பயிற்சியாளர்
- ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியில் பெரிய அளவில் எங்கள் அணியில் மாற்றம் இருக்காது.
- விராட் கோலி ஆர்சிபி அணியின் ஒரு பெரிய அங்கம்.
18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 10 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு மோதுகின்றன. அதாவது 5 அணிகளுடன் தலா 2 முறை, மீதமுள்ள 4 அணிகளுடன் தலா ஒரு முறை என ஒவ்வொரு அணியும் மொத்தம் 14 லீக்கில் விளையாட வேண்டும்.
இந்த நிலையில் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் இன்றிரவு அரங்கேறும் 8-வது லீக் ஆட்டத்தில் 5 முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, பெங்களூரு ராயல் சேலஞ்சர்சை சந்திக்கிறது. இதையொட்டி இரு அணி வீரர்களும் நேற்று தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் விராட் கோலி, பட்டிதாரை அமைதியாகிவிட்டால் சிஎஸ்கே வெல்ல அதிக வாய்ப்பு உள்ளது என சிஎஸ்கே அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் கூறியுள்ளார்.
இது குறித்து பிளமிங் கூறியதாவது:-
விராட் கோலி ஆர்சிபி அணியின் ஒரு பெரிய அங்கம். ஆர்சிபி அணியில் விராட் கோலியையும் ரஜத் பட்டிதாரையும் அமைதியாகிவிட்டால் சிஎஸ்கே வெல்ல அதிக வாய்ப்பு உள்ளது. இரண்டு அணிகளுமே கடந்த ஆண்டை விட தற்போது வித்தியாசமாக இருக்கிறது.
விராட் கோலியை தவிர இம்முறை அவர்கள் பல பலமான வீரர்களை சேர்த்து இருக்கிறார்கள். ஆர்சிபி மட்டுமல்ல ஒட்டு மொத்த அணிகளும் தற்போது இப்படிதான் கட்டமைக்கப்பட்டிருக்கிறது.
கடந்த ஆண்டுகளை விட இம்முறை தொடர் சரிசமமாக இருப்பதாக நான் நினைக்கின்றேன். பதிரானாவுக்கு காயம் ஏற்பட்டிருக்கிறது. இதனால் அவர் இன்றைய போட்டியில் பங்கேற்க மாட்டார். ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியில் பெரிய அளவில் எங்கள் அணியில் மாற்றம் இருக்காது.
என்று பிளெமிங் தெரிவித்துள்ளார்.