search icon
என் மலர்tooltip icon

    ஐ.பி.எல்.

    விராட் கோலி தனது ஸ்ட்ரைக் ரேட்டை உயர்த்த வேண்டிய அவசியமில்லை- ஏபிடி வில்லியர்ஸ்
    X

    விராட் கோலி தனது ஸ்ட்ரைக் ரேட்டை உயர்த்த வேண்டிய அவசியமில்லை- ஏபிடி வில்லியர்ஸ்

    • பிலிப் சால்ட் போன்ற வீரர்கள் இருக்கிறார்கள்.
    • கோலி கடந்த பல வருடங்களைப் போல் இம்முறையும் போட்டியை கட்டுப்படுத்தும் அளவுக்கு விளையாட வேண்டும்.

    ஐபிஎல் தொடர் மார்ச் 22-ம் தேதி கொல்கத்தாவில் தொடங்குகிறது. தொடரின் முதல் போட்டியில் நடப்புச் சாம்பியன் கொல்கத்தா அணியை பெங்களூரு சந்திக்கிறது.

    17 வருடங்களாக ஒரு கோப்பையை கூட வெல்லாததால் கிண்டலடிக்கப்பட்டு வரும் அந்த அணி இம்முறை ரஜத் படிதார் தலைமையில் முதல் சாம்பியன் பட்டத்தை முத்தமிடும் முனைப்புடன் களமிறங்க உள்ளது.

    கடந்த வருடம் விராட் கோலி 741 ரன்கள் அடித்து ஆர்சிபி அணி பிளே ஆப் சுற்றுக்கு செல்ல முக்கிய பங்காற்றினார். ஆனாலும் அவர் குறைவான ஸ்ட்ரைக் ரேட்டில் விளையாடியது ஒருபுறம் பெங்களூரு அணிக்கு பின்னடைவை கொடுத்தது. அதனால் விராட் கோலி விமர்சனங்களையும் சந்தித்தார்.

    இந்நிலையில் விராட் கோலியின் ஸ்ட்ரைக் ரேட் பிரச்சினையில்லை என்று அந்த அணியின் முன்னாள் ஜாம்பவான் வீரர் ஏபி டீ வில்லியர்ஸ் கூறியுள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    பிலிப் சால்ட் போன்ற வீரர்கள் இருக்கிறார்கள். எனவே விராட் கோலி தனது ஸ்ட்ரைக் ரேட்டை உயர்த்த வேண்டிய அவசியமில்லை. ஐபிஎல் மற்றும் இதர தொடர்களில் பிலிப் சால்ட் மிகவும் அட்டாக் செய்யக்கூடிய ஒரு வீரராக விளையாடி வருகிறார். அவர் விராட் கோலி மீதான அழுத்தத்தை எடுத்து விடுவார் என்று நினைக்கிறேன்.

    அது போன்ற சூழ்நிலையில் விராட் கோலி கடந்த பல வருடங்களைப் போல் இம்முறையும் போட்டியை கட்டுப்படுத்தும் அளவுக்கு விளையாட வேண்டும். எப்போது ரிஸ்க் எடுக்க வேண்டும் எப்போது கூடாது என்பது அவருக்குத் தெரியும். இந்தத் தொடரில் அவர் பெங்களூரு அணியின் பேட்டிங் துறையின் கேப்டனாக செயல்பட்டு புத்திசாலித்தனமான கிரிக்கெட்டை விளையாட வேண்டும்.

    ஏனெனில் இம்முறை பெங்களூரு அணி நிறைய மைதானங்களுக்கு பயணித்து விளையாட உள்ளது. அங்கே பேட்டிங் ஆர்டரில் குறைந்த ரன்களுக்குள் சரிவு ஏற்படாமல் இருப்பதை பார்த்துக்கொள்ள வேண்டும். தன்னைச் சுற்றி அதிரடியாக விளையாடும் வீரர்கள் இருப்பதால் விராட் புத்திசாலித்தனமான கிரிக்கெட்டை விளையாட வேண்டும்.

    என்று டிவில்லியர்ஸ் கூறினார்.

    Next Story
    ×