search icon
என் மலர்tooltip icon

    ஐ.பி.எல்.

    அனிமல் ஸ்டைலில் எம்எஸ் தோனி- வைரலாகும் வீடியோ
    X

    அனிமல் ஸ்டைலில் எம்எஸ் தோனி- வைரலாகும் வீடியோ

    • அனிமல் படத்தின் இயக்குநர் சந்தீப் ரெட்டி இயக்கத்தில் ஒரு விளம்பர படத்தில் தோனி நடித்துள்ளார்.
    • அந்த படத்தில் ரன்பீர் கபூரின் கெட்டப்பை தோனி அப்படியே பிரதிபலித்துள்ளார்.

    ஐபிஎல் தொடரின் 18-வது சீசன் வருகிற 22-ந் தேதி தொடங்குகிறது. இதற்காக 10 அணி வீரர்களும் தீவிரமாக பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனியின் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதாவது அனிமல் படத்தின் இயக்குநர் சந்தீப் ரெட்டி இயக்கத்தில் ஒரு விளம்பர படத்தில் தோனி நடித்துள்ளார்.

    மோட்டாரட் என்ற நிறுவனத்தின் விளம்பர படத்தில் சந்தீப் ரெட்டி வாங்கா இயக்கிய அனிமல் படத்தின் ஒரு காட்சியை உருவாக்கியுள்ளார். அந்த படத்தில் ரன்பீர் கபூரின் கெட்டப்பை தோனி அப்படியே பிரதிபலித்துள்ளார். ரன்பீர் அந்த பிளாக்பஸ்டர் திரைப்படத்தில் ரண்விஜய் சிங் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

    எம்.எஸ். தோனி ஒரு காரிலிருந்து வெளியே வந்து தனது நண்பர்களுடன் ஒரு கேங்க்ஸ்டர் பாணியில் சாலையைக் கடக்கும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. ரன்பீர் கபூர் அனிமல் திரைப்படத்தில் செய்ததைப் போலவே தோனி செய்துள்ளார்.

    ஆனால், தோனியின் வீடியோவில் ஒரு வித்தியாசம் என்னவென்றால், அவர் எலக்ட்ரிக் சைக்கிளுடன் சாலையைக் கடக்கிறார். இந்த வீடியோவில் வாங்கா மற்றும் தோனி இடையே உரையாடலும் நடந்தது. மேலும், இயக்குனர் தோனியின் நடிப்பைப் பாராட்டினார். மேலும், அவரது ஸ்டைல் அனைவருக்கும் பிடிக்கும் என்று இயக்குநர் கூறினார். இந்த வீடியோ ரசிகர்களிடையே பெரும் வரவேற்ப்பை பெற்றுள்ளது.

    Next Story
    ×