என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    உள்ளூர் போட்டிகளில் மாஸ் காட்டிய கருண் நாயருக்கு இந்திய டெஸ்ட் அணியில் இடம்?
    X

    உள்ளூர் போட்டிகளில் மாஸ் காட்டிய கருண் நாயருக்கு இந்திய டெஸ்ட் அணியில் இடம்?

    • இந்திய அணி டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக ஜூன் மாதம் இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது.
    • இந்த தொடருக்கு முன்னதாக இந்திய ஏ அணி நான்கு நாள் ஆட்டம் கொண்ட 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது.

    ஐபிஎல் தொடர் கடந்த 22-ந் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடர் மே மாதம் 25-ந் தேதி முடிவடைகிறது. இதனை தொடர்ந்து இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. இந்த தொடர் ஜூன் 20-ந் தேதி தொடங்கி ஜூலை 31-ந் தேதி வரை நடக்கிறது.

    இந்த தொடருக்கு முன்னதாக இந்திய ஏ அணி, இங்கிலாந்து லயன்ஸ் அணியுடன் நான்கு நாள் ஆட்டம் கொண்ட 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. இதற்கான இந்திய ஏ அணியில் கருண் நாயர் இடம் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    உள்ளூர் போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியன் மூலம் கருண் நாயர் இந்திய ஏ அணியில் சேர்க்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இவர் நடந்து முடிந்த சையத் முஸ்தாக் அலி டிராபி தொடரில் அதிக ரன்கள் குவித்தார்.

    இதனை தொடர்ந்து நடைபெற்ற ரஞ்சி டிராபியில் 54 சராசரியுடன் 863 ரன்கள் குவித்தார். இதில் 4 சதம், 2 அரைசதம் அடங்கும்.

    Next Story
    ×