search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    பட்டையை கிளப்பிய படிதார்.. டெல்லியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது மத்திய பிரதேசம்
    X

    பட்டையை கிளப்பிய படிதார்.. டெல்லியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது மத்திய பிரதேசம்

    • முதலில் விளையாடிய டெல்லி அணி 146 ரன்கள் எடுத்தது.
    • அதிரடியாக விளையாடிய படிதார் 29 பந்தில் 66 ரன்கள் குவித்தார்.

    17-வது சையத் முஷ்டாக் அலி 20 ஓவர் கிரிக்கெட் போட்டியின் 2-வது அரையிறுதி ஆட்டத்தில் மத்திய பிரதேசம் - டெல்லி அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற மத்திய பிரதேசம் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் விளையாடிய டெல்லி அணி மந்தமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதனால் 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 146 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக அனுஜ் ராவத் 24 பந்தில் 33 ரன்கள் எடுத்தார்.

    இதனையடுத்து மத்திய பிரதேசத்தின் தொடக்க வீரர் அர்பித் கவுட் முதல் பந்தில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த சேனாபதி 7 ரன்னிலும் ஹர்ஷ் கவ்லி 30 ரன்னில் வெளியேறினர்.

    இதனை தொடர்ந்து ஹர்பிரீத் சிங் பாட்டியா- ரஜத் படிதார் ஆகியோர் பொறுப்புடன் விளையாடி ரன்களை குவித்தனர். அதிரடியாக விளையாடி படிதார் அரை சதம் விளாசினார்.

    இறுதியில் 15.4 ஓவரில் 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 152 ரன்கள் எடுத்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம் மத்திய பிரதேசம் அணி இறுதிப் போட்டியில் மும்பையை வருகிற 15-ந் தேதி எதிர் கொள்கிறது.

    Next Story
    ×