என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    30/3, 20/3 என அணி தத்தளித்தபோது ரன்கள் குவித்துள்ளேன்: ரகானே
    X

    30/3, 20/3 என அணி தத்தளித்தபோது ரன்கள் குவித்துள்ளேன்: ரகானே

    • சீம், பவுன்ஸ், மூவ் என பந்து எந்த வகையில் சவால் கொடுத்தாலும் நான் எப்போதும் அதை விரும்புவேன்.
    • 30-க்கு 3, 20-க்கு 3 அல்லது 50-க்கு 3 என தத்தளித்த போதெல்லாம் நான் ரன்கள் குவித்துள்ளேன்.

    இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் தலைசிறந்த மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாக திகழ்ந்தவர் ரகானே. குறிப்பாக வெளிநாடுகளில் வேகப்பந்து வீச்சை எளிதாக சமாளித்து ரன் சேர்க்கக் கூடியவர். இந்திய அணி வெளிநாட்டு மண்ணில் விரைவாக விக்கெட்டுகளை இழந்தாலும் தன்னுடைய சிறந்த ஆட்டத்தால் சவால்களை எதிர்கொண்டு அசத்தியவர்.

    கடந்த முறை இந்திய அணி ஆஸ்திரேலியாவில் தொடரை வெல்ல முக்கிய காரணமாக இருந்தவர்களில் ஒருவர். விராட் கோலி முதல் போட்டியில் தோல்வியடைந்த நிலையில் தொடரில் இருந்து சொந்த காரணமாக விலகினார். அதன்பின் அணியை வழிநடத்தி 2-1 என வெற்றி பெற வைத்தார்.

    எப்போதும் தனக்கு சவால் பிடிக்கும் என ரகானே தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ரகானே கூறியிருப்பதாவது:-

    எங்கெல்லாம் அல்லது எப்போதெல்லாம் சாவல் ஏற்படுகிறதோ, அதை நான் விரும்புகிறேன். இந்திய அணி ஒரு கட்டத்தில் 30-க்கு 3, 20-க்கு 3 அல்லது 50-க்கு 3 என தத்தளித்த போதெல்லாம் நான் ரன்கள் குவித்துள்ளேன். அந்த இடத்தில் இருந்து அணி ஒரு கவுரமாக ஸ்கோரை எட்ட வேண்டிய நிலை அணிக்கு ஏற்பட்டுள்ளது. என்னுடைய கிரிக்கெட் வாழ்நாள் முழுவதும் அப்படிப்பட்ட சூழ்நிலையில் என்னுடைய சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளேன்.

    சீம், பவுன்ஸ், மூவ் என பந்து எந்த வகையில் சவால் கொடுத்தாலும் நான் எப்போதும் அதை விரும்புவேன்.

    இவ்வாறு ரகானே தெரிவித்துள்ளார்.

    85 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள ரகானே 5077 ரன்கள் அடித்துள்ளார். சராசரி 38.46 ஆகும். 12 சதங்கள், 26 அரை சதங்கள் அடித்துள்ளார். தற்போதைய ஆஸ்திரேலிய தொடருக்கான இந்திய அணியில் அவருக்கு இடம் கிடைக்கவில்லை.

    Next Story
    ×