search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    என் மகனுக்கு எதிராக சதித்திட்டம் தீட்டுகிறார்கள் - சஞ்சு சாம்சன் தந்தை
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    என் மகனுக்கு எதிராக சதித்திட்டம் தீட்டுகிறார்கள் - சஞ்சு சாம்சன் தந்தை

    • மக்களும் அவர்களைத்தான் நம்புவார்கள்.
    • எங்களால் அவர்களுடன் சண்டையிட முடியவில்லை.

    விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட் தொடருக்கான கேரள அணியில் சஞ்சு சாம்சன் இடம் பெறவில்லை. பயிற்சியில் பங்கேற்காதது தான் இதற்கு காரணம் என்று கேரள கிரிக்கெட் சங்கம் தெரிவித்து இருந்தது. ஆனால் சஞ்சு சாம்சனுக்கும், கேரள கிரிக்கெட் சங்க நிர்வாகிகளுக்கும் இடையே மோதல் இருப்பது தான் இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது.

    இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் விளையாடி வரும் சஞ்சு சாம்சன் ஒருநாள் போட்டி மற்றும் சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இடம் பெறவில்லை. இந்தநிலையில், என் மகன் பாதுகாப்பாக இல்லை. கேரளா கிரிக்கெட் சங்கம் எல்லாவற்றுக்கும் சஞ்சு சாம்சன் மீது பழி சுமத்துவார்கள், மக்களும் அவர்களைத்தான் நம்புவார்கள் என்று அவரது தந்தை விஸ்வநாத் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து பேசிய அவர், "சஞ்சுவுக்கு எதிராக அவர்கள் ஏதோ திட்டமிடுகிறார்கள் என்பது ஆறு மாதங்களுக்கு முன்பே எனக்கு தெரியும். அவர் கேரளாவை விட்டு வெளியேறும் வகையில் கேரளா கிரிக்கெட் சங்கம் சதித்திட்டம் தீட்டிக்கொண்டிருந்தது. எங்களால் அவர்களுடன் சண்டையிட முடியவில்லை."

    "அங்குள்ள இயக்குநர்களிடம் பதில் பேச முடியாது, என் மகன் பாதுகாப்பாக இல்லை. அவர்கள் எல்லாவற்றிற்கும் சஞ்சு மீது பழி சுமத்துவார்கள், மக்களும் அவர்களை நம்புவார்கள். எனவே என் மகன் கேரளாவுக்காக கிரிக்கெட் விளையாடுவதை நிறுத்த வேண்டும் என்று நான் விரும்புகிறேன்."

    "வேறு எந்த மாநிலமும் என் மகனுக்கு வாய்ப்பு கொடுக்க விரும்பினால், நான் அதை வேண்டுகோளை முன்வைக்க தயாராக இருக்கிறேன்," என்று தெரிவித்தார்.

    Next Story
    ×