என் மலர்
விளையாட்டு
பிரான்ஸ் முன்னணி வீரர் பென்ஜிமா காயத்தால் விலகல்
- அண்மையில் உலகின் சிறந்த கால்பந்து வீரர் விருதை பெற்ற 34 வயதான பென்ஜிமா, ஸ்பெயினின் மாட்ரிட் கிளப்புக்காக ஆடுகிறார்.
- பென்ஜிமா விலகல் நடப்பு சாம்பியன் பிரான்சுக்கு மிகப்பெரிய பின்னடைவு என்பதில் சந்தேகமில்லை.
தோகா:
பிரான்சின் தலைச்சிறந்த வீரர்களில் ஒருவராக திகழும் கரீம் பென்ஜிமா உலக கோப்பை போட்டிக்காக சக வீரர்களுடன் இணைந்து தீவிர பயிற்சி மேற்கொண்டு வந்தார்.
இந்த நிலையில் பயிற்சியின் போது அவரது இடது தொடையில் தசைப்பிடிப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவர் நேற்று உலக கோப்பை போட்டியில் இருந்து விலகினார்.
அண்மையில் உலகின் சிறந்த கால்பந்து வீரர் விருதை பெற்ற 34 வயதான பென்ஜிமா, ஸ்பெயினின் மாட்ரிட் கிளப்புக்காக ஆடுகிறார்.
2021-22-ம் ஆண்டு சீசனில் மாட்ரிட் அணிக்காக பென்ஜிமா 32 ஆட்டத்தில் 44 கோல்கள் அடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. அவரது விலகல் நடப்பு சாம்பியன் பிரான்சுக்கு மிகப்பெரிய பின்னடைவு என்பதில் சந்தேகமில்லை.
ஏற்கனவே பால் போக்பா, என்கோலோ கான்டே ஆகியோரும் காயத்தால் பின்வாங்கியதால், இப்போது பிரான்ஸ் தங்களது திட்டமிடலை மாற்றி அமைக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.