search icon
என் மலர்tooltip icon

    விளையாட்டு

    சர்வதேச நிறுவனம் நடத்திய ஆய்வு.. அமிதாப், ஷாருக்-ஐ பின்தள்ளிய எம்.எஸ். டோனி
    X

    சர்வதேச நிறுவனம் நடத்திய ஆய்வு.. அமிதாப், ஷாருக்-ஐ பின்தள்ளிய எம்.எஸ். டோனி

    • சமீபத்தில் நடைபெற்ற ஏலத்தில் சிஎஸ்கே அணி ரூ.4 கோடிக்கு டோனியை தக்க வைத்துக்கொண்டது.
    • இந்த ஆண்டின் முதல் பாதியில் அவரது சந்தை மதிப்பு அதிகரித்துள்ளது.

    இந்திய கிரிக்கெட் ரசிகர்களால் கொண்டாடப்படும் வீரர் எம்.எஸ். டோனி. இவர் அடிக்கும் ஹெலிகாப்டர் சிக்ஸரை யாராலும் மறக்க முடியாது. அவர் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றாலும் அவருக்கான ரசிகர்கள் பட்டாளம் ஏராளம்.

    டோனி தற்போது ஐ.பி.எல். போட்டிகளில் மட்டுமே விளையாடி வருகிறார். 2025-ம் ஆண்டு நடைபெற உள்ள ஐ.பி.எல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாட உள்ளார். இதற்காக சமீபத்தில் நடைபெற்ற ஏலத்தில் சிஎஸ்கே அணி ரூ.4 கோடிக்கு டோனியை தக்க வைத்துக்கொண்டது.

    இதனிடையே, ஐ.பி.எல். போட்டிகளை தவிர்த்து வேறு எந்த போட்டிகளிலும் பங்கேற்காத போதிலும் எம்.எஸ். டோனியின் சந்தை மதிப்பு சரியவில்லை. மாறாக இந்த ஆண்டின் முதல் பாதியில் அவரது சந்தை மதிப்பு அதிகரித்துள்ளது.

    இந்த ஆண்டின் முதல் பாதியில் பிராண்ட் ஒப்புதல்கள் அடிப்படையில் அமிதாப் பச்சன் மற்றும் ஷாருக் கான் போன்ற பாலிவுட் ஜாம்பவான்களை டோனி பின்னுக்குத்தள்ளி உள்ளதாக என்று அமெரிக்காவை சேர்ந்த நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

    சமீபத்தில் யூரோக்ரிப் (Eurogrip) டயர்களின் விளம்பர தூதராக மாறிய தோனி, கல்ஃப் ஆயில் (Gulf Oil), க்ளியர்-ட்ரிப் (Cleartrip), மாஸ்டர் கார்டு (Master Card), சிட்ரோயன் (Citroen), லேஸ் (Lay's) மற்றும் கருடா ஏரோஸ்பேஸ் (Karuda Aerospace) போன்ற பெரிய பிராண்டுகளின் தூதராகி உள்ளார்.

    இந்த ஆண்டின் முதல் பாதியில் மட்டும் எம்.எஸ். டோனி 42 விளம்பர ஒப்பந்தங்களைப் பெற்றுள்ளார். இந்த எண்ணிக்கை அமிதாப்பை விட ஒன்றும், ஷாருக்கை விட 8 அதிகம்.

    Next Story
    ×