search icon
என் மலர்tooltip icon

    பாரிஸ் ஒலிம்பிக் 2024

    மல்யுத்தத்தில் வெண்கலம் வென்ற அமன் ஷெராவத்.. 10 மணி நேரத்தில் 4.6 கிலோ குறைத்தது எப்படி?
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    மல்யுத்தத்தில் வெண்கலம் வென்ற அமன் ஷெராவத்.. 10 மணி நேரத்தில் 4.6 கிலோ குறைத்தது எப்படி?

    • வெறும் 10 மணி நேரமே இருந்த நிலையில் அவரின் எடையைக் குறைக்க கடுமையான பயிற்சிகளில் அவர் ஈடுபட்டார்
    • பல்வேறு முயற்சிகளுக்குப் பிறகு அமனின் எடை எடை 3.6 கிலோ குறைந்தது.

    பாரீஸ் ஒலிம்பிக் மல்யுத்தம் போட்டியில் ஆண்களுக்கான 57 கிலோ எடைப்பிரிவு ப்ரீஸ்டைல் பிரிவில் வெண்கலப் பதக்கத்துக்கான ஆட்டத்தில் இந்தியாவின் அமன் ஷெராவத், பியூர்டோரிகோவின் டேரியன் கிரஸ் உடன் மோதினார். இந்த ஆட்டத்தில் ஆரம்பம் முதலே அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய அமன் ஷெராவத் 13-5 என்ற புள்ளிக்கணக்கில் டேரியன் கிரஸை வீழ்த்தி வெண்கலப் பதக்கத்தை கைப்பற்றினார்.

    முன்னதாக நேற்று முன்தினம் நடந்த அரையிறுதியில் ஜப்பான் வீரரிடம் 10-0 என்ற புள்ளி கணக்கில் தோல்வியை சந்தித்திருந்தார். எனவே அரையிறுதியில் தோல்வி அடைந்த அமன் ஷெராவத் வெண்கலப் பதக்கத்திற்கான போட்டியில் பங்கேற்பார் என தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது இறுதிப்போட்டியில் வெற்றி பெறுவதற்காக கடுமையான உழைப்பை செலுத்தியுள்ளார் அமன் ஷெராவத்.

    பெண்கள் மல்யுத்த இறுதிப்போட்டிக்கு முன்னேறிய இந்திய வீராங்கனை வினேஷ் போகத் 100 கிராம் எடை அதிகரித்துள்ளதாகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டது நாட்டையே சோகத்தில் ஆழ்த்தியது. எனவே மல்யுத்தத்தில் இந்தியாவின் கடைசி பிரிவில் பிறகு இந்த வருட ஒலிம்பிக்ஸ் மல்யுத்தத்தில் இந்தியாவுக்கான கடைசி நம்பிக்கையாக இருந்த அமன் பதக்கத்தை வென்றெடுப்பதற்காக மேற்கொண்ட முயற்சிகள் கவனம் பெற்றுள்ளது.

    நேற்று முன் தினம் இரவு நடத்த போட்டியின்போது அமன் ஷெராவத்தின் எடை 61.5 கிலோ ஆக இருந்தது. எனவே இறுதிப்போட்டிக்கு முன்னர் சுமார் 4.6 கிலோவைக் குறைக்க அமனிடம் வெறும் 10 மணி நேரமே இருந்த நிலையில் அவரின் எடையைக் குறைக்க கடுமையான முயற்சிகளில் அவரை பயிற்சியாளர்கள் ஈடுபடுத்தினர்.

    ஒன்றை மணி நேரம் கோச்களுடன் மல்யுத்த பயிற்சி, ஒரு மணி நேரம் சூடான நீரில் குளியல், நேற்று முன்தினம் நள்ளிரவுக்கு 30 நிமிடங்களுக்கு முன் ஜிம்மில் ஒரு மணி நேரம் இடைவிடாமல் ட்ரெட்மில்லில் ஓட்டம், அதன்பின் 30 நிமிட இடைவெளிக்குப் பிறகு, 5 முறை நீராவிக் குளியல் என பல்வேறு முயற்சிகளுக்குப் பிறகு அமனின் எடை எடை 3.6 கிலோ குறைந்தது. தொடர்ந்து மசாஜ் , ஜாகிங், ரன்னிங், என காலை 4.30 மணியளவில் அமனின் மொத்த எடை 56.9 ஆக குறைந்தது.

    அதாவது அதிகபட்ச எடையான 57 கிலோவுக்கு 100 கிராம் குறைவாகவே தனது எடையைக் கொண்டுவந்துள்ளார் அமன். இந்த மொத்த பயிற்சிக்கு இடையில் அமன் மற்றும் அவர்து பயிற்சியாளர்கள் தூங்கவே இல்லை. இடையிடையில், லெமன் கலந்த நீர், தேன், சிறிதளவு காப்பி மட்டுமே அமனின் அப்போதைய உணவு. இவை வழக்கமாக இருந்தாலும், வினேஷ் போகத்தின் தகுதி நீக்கம் தங்களை மிகவும் அழுத்தத்துக்கு உள்ளாக்கியதாக அமனின் பயிற்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

    Next Story
    ×