என் மலர்
விளையாட்டு
X
தனது திருமண புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த பி.வி.சிந்து
Byமாலை மலர்24 Dec 2024 6:54 PM IST
- பி.வி. சிந்துவிற்கும் வெங்கட தத்தா சாய் என்பவருக்கும் நேற்று முன்தினம் திருமணம் நடைபெற்றது.
- இன்று ஐதராபாத்தில் இவர்களின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.
இந்தியா சார்பில் ஒலிம்பிக்கில் பங்கேற்று 2 முறை பதக்கம் வென்று நாட்டுக்கு பெருமை சேர்த்த பேட்மிண்டன் வீராங்கனை பி.வி. சிந்து.
முன்னாள் உலக சாம்பியனான பி.வி. சிந்துவிற்கும் வெங்கட தத்தா சாய் என்பவருக்கும் நேற்று முன்தினம் ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களின் முன்னிலையில் திருமணம் நடைபெற்றது. இன்று ஐதராபாத்தில் இவர்களின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.
இந்நிலையில், திருமண புகைப்படங்களை பி.வி. சிந்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அப்புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.
சிந்துவின் கணவர், போசிடெக்ஸ் டெக்னாலஜீஸ் என்ற நிறுவனத்தின் செயல் இயக்குநராக பணிபுரிந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story
×
X