search icon
என் மலர்tooltip icon

    விளையாட்டு

    ஆசிய கலப்பு அணி சாம்பியன்ஷிப்: காயம் காரணமாக பி.வி. சிந்து விலகல்
    X

    ஆசிய கலப்பு அணி சாம்பியன்ஷிப்: காயம் காரணமாக பி.வி. சிந்து விலகல்

    • குரூப் டி பிரிவில் இந்தியா இடம் பிடித்துள்ளது.
    • 12-ந்தேதி மக்காவு சீனா அணியையும், 13-ந்தேதி தென்கொரிய அணியையும் இந்தியா எதிர்கொள்கிறது.

    ஆசிய கலப்பு அணி சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் போட்டி சீனாவில் நடைபெற இருக்கிறது. இதற்கான பெண்கள் அணியில் பி.வி. சிந்து இடம் பிடித்திருந்தார். தொடரில் சிறப்பாக விளையாடுவதற்காக கவுகாத்தியில் பயிற்சி மேற்கொண்டு வந்தார்.

    பயிற்சியின்போது அவருக்கு காயம் (hamstring) ஏற்பட்டது. இதனால் ஆசிய கலப்பு அணி சாம்பியன்ஷிப் தொடரில் இருந்து விலகியுள்ளார். பி.வி. சிந்து வலகியுள்ளதால் பெண்கள் அணிக்கு மாளவிகா பன்சாட் தமைமை ஏற்பார். இவர் உலகத் தரவரிசையில் 29-வது இடத்தில் உள்ளார்.

    "சீனாவிற்கு என்னால் பயணம் மேற்கொள்ள முடியாது என்பதை மிகவும் வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன். கவுகாத்தில் நடைபெற்ற பயிற்சியின்போது, எனது தொடைப்பகுதியில் தசைப்பிடிப்பு ஏற்பட்டதாக உணர்ந்தேன். இருந்தபோதிலும் நாட்டிற்காக கடுமையாக உழைக்க முயற்சி எடுத்த போதிலும், எம்.ஆர்.ஐ. ஸ்கேனில் நான் எதிர்பார்த்ததைவிட குணமடைய அதிக நாட்கள் பிடிக்கும் எனத் தெரியவந்துள்ளது.

    அணிக்கு என்னுடைய வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். வெளியில் இருந்து அணியை உற்சாகப்படுத்துவேன்" என பி.வி. சிந்து தெரிவித்துள்ளார்.

    இந்திய ஆண்கள் அணியில் லக்சயா சென், ஹெச்.எஸ். பிரனோய், சாத்விக்சாய்ராஜ் ராங்கிரெட்டி, சிராக் ஷெட்டி, துருவ் கபிலா, எம்.ஆர். அர்ஜுன், சதீஷ் கமார் கருணாகரன் இடம் பிடித்துள்ளனர்.

    பெண்கள் அணியில் மாளவிகா பன்சாட், காயத்திரி கோபிசந்த், திரீஷா, அஷ்வினி பொன்னப்பாக, தனிஷா கிராஸ்டோ, ஆத்யா வாரியாத் இடம் பெற்றுள்ளனர்.

    இந்திய அணி குரூப் "டி" யில் இடம் பிடித்தள்ளது. இந்த அணியில் தென்கொரியா, மக்காவு சீனா அணிகள் இடம் பிடித்துள்ளது.

    12-ந்தேதி மக்காவு சீனா அணியையும், 13-ந்தேதி தென்கொரிய அணியையும் இந்தியா எதிர்கொள்ள இருக்கிறது.

    Next Story
    ×