என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
விளையாட்டு
![தமிழ்நாடு கைப்பந்து சங்க சேர்மனாக எஸ்.என்.ஜெயமுருகன் தேர்வு தமிழ்நாடு கைப்பந்து சங்க சேர்மனாக எஸ்.என்.ஜெயமுருகன் தேர்வு](https://media.maalaimalar.com/h-upload/2022/12/27/1813247-volleyball.webp)
X
தமிழ்நாடு கைப்பந்து சங்க சேர்மனாக எஸ்.என்.ஜெயமுருகன் தேர்வு
By
மாலை மலர்27 Dec 2022 3:47 PM IST
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- சங்கத்தின் சேர்மனாக இருந்து வந்த ஏ.கே.சித்திரை பாண்டியன் காலமாகி விட்டது.
- காலியாக உள்ள அந்த பொறுப்புக்கு தொழிலதிபர் எஸ்.என்.ஜெயமுருகன் போட்டியின்றி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.
சென்னை:
தமிழ்நாடு மாநில கைப்பந்து சங்கத்தின் வருடாந்திர பொதுக்குழு கூட்டம் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் நடந்தது. கூட்டத்துக்கு மாநில தலைவர் டாக்டர் பொன் கவுதம சிகாமணி தலைமை தாங்கினார். இதில் சங்கத்தின் சேர்மனாக இருந்து வந்த ஏ.கே.சித்திரை பாண்டியன் காலமாகி விட்டதால் காலியாக உள்ள அந்த பொறுப்புக்கு தொழிலதிபர் எஸ்.என்.ஜெயமுருகன் போட்டியின்றி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.
அடுத்த ஆண்டு மே, ஜூன் மாதங்களில் தமிழ்நாடு கைப்பந்து லீக் போட்டியை நடத்துவது என்றும், லீக் கமிட்டிக்கு சேர்மனாக அர்ஜூன் துரையை நியமிப்பது என்றும், சப்-ஜூனியர், ஜூனியர் அளவிலான மாநில சாம்பியன் ஷிப் போட்டிகளை பிப்ரவரியில் நடத்துவது என்றும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
Next Story
×
X