search icon
என் மலர்tooltip icon

    டென்னிஸ்

    • ஜோகோவிச் 10.30 மணிக்கு போட்டியை தொடங்கியதால் அதிகாலை 3 மணிக்கு முடிவடைந்தது.
    • 8 மணிக்கு தொடங்காதது அமைப்பாளர்களின் தவறு என முன்னாள் வீரர் ஜான் மெக்என்ரோ குற்றச்சாட்டு.

    உலகின் நம்பர் ஒன் டென்னிஸ் வீரராக திகழ்ந்து வருபவர் செர்பியாவின் நோவக் ஜோகோவிச். நடால் உள்ளிட்ட முன்னிட்ட வீரர்கள் தொடக்கத்திலேயே வெளியேறியதால் ஜோகோவிச் பிரெஞ்சு ஓபனை கைப்பற்றுவார் என எதிர்பார்க்கப்பட்டது.

    ஆனால் 4-வது சுற்றில் ஜோகோவிச் அர்ஜென்டினாவின் செருண்டோலோவை எதிர்கொண்டார். தரநிலையில் முதல் இடத்தில் இருந்த ஜோகோவிச்சுக்கு 23-ம் நிலை வீரரான செருண்டோலோ கடும் சவாலாக திகழ்ந்தார். இதனால் ஜோகோவிச் ஐந்து செட்கள் வரை விளையாட வேண்டியிருந்தது.

    4-வது செட்டில் விளையாடும்போது கால் மூட்டில் ஜோகோவிச்சிற்கு காயம் ஏற்பட்டது. அந்த காயத்துடன் விளையாடி வெற்றி பெற்றார். இதனால் காலிறுதியில் அவரால் விளையாட முடியாமல் போய்விட்டது. இதனால் போட்டியில் இருந்து வெளியேறியதுடன் நம்பர் ஒன் இடத்தையும் இழந்தார்.

    காயத்திற்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ள இருக்கிறார். இதனால் விம்பிள்டனில் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஒலிம்பிக்கில் விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த நிலையில் ஜோகோவிச்சை போட்டியை 10.30 மணிக்கு தொடங்கியதுதான் காயத்திற்கு முக்கிய காரணம் என முன்னாள் ஜாம்பவான் ஜான் மெக்என்ரோ போட்டி அமைப்பாளர் மீது குற்றம்சாட்டியுள்ளார்.

    இது தொடர்பாக ஜான் மெக்என்ரோ கூறுகையில் "3-வதுசுற்றில் டிமிட்ரோவ்- பெர்க்ஸ் இடையிலான போட்டி மழையால் ஒத்திவைக்கப்பட்டது இந்த போட்டி பாரீஸ் உள்ளூர் நேரப்படி 8 மணிக்கு ஜோகோவிச் விளையாடும் கோர்ட்டிற்கு மாற்றப்பட்டது. இந்த நேரத்தில் ஜோகோவிச் போட்டியை தொடங்கியிருக்க வேண்டும். ஆனால் அந்த நேரத்தில் போட்டியை தொடங்க முடியவில்லை.

    10.30 மணிக்குதான் போட்டி தொடங்கியது. ஐந்த செட் வரை நீடித்ததால் அதிகாலை 3 மணிக்குதான் போட்டி முடிவடைந்தது. இந்த போட்டியால் ஜோகோவிச் எத்தனை போட்டியை இழக்க போகிறார் என்பதை தெரியாமல் அமைப்பாளர்கள் மிகப்பெரிய தவறை செய்துவிட்டனர். காலநிலை (Weather) மிகவும் மோசமான இருந்தது. அது கஷ்டனமா நிலையை உருவாக்கியது." என்றார்.

    • ஐந்து செட்கள் வரை சென்ற நீண்ட நேர ஆட்டத்தில் அல்காரஸ் சின்னெரை வீழ்த்தினார்.
    • முதல் செட்டை இழந்த போதிலும், அடுத்த மூன்று செட்களையும் வரிசையாக கைப்பற்றினார் ஸ்வெரேவ்.

    பாரீஸ் நகரில் நடந்து வரும் 'கிராண்ட்ஸ்லாம்' அந்தஸ்து பெற்ற பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி இறுதிகட்டத்தை நெருங்கிவிட்டது.

    இதில் நேற்றிரவு நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் அரையிறுதியின் முதல் போட்டியில் 2-ம் நிலை வீரர் ஜானிக் சின்னெர் (இத்தாலி), 3-ம் நிலை வீரர் கார்லஸ் அல்காரசை (ஸ்பெயின்) சந்தித்தார். இருவரும் நீயா-நானா என்று ஆக்ரோஷமாக ஆடியதால் ஆட்டம் சூடு பிடித்தது.

    முதல் 4 செட்டுகளை இருவரும் தலா 2 வீதம் வசப்படுத்திய நிலையில், கடைசி செட் மேலும் பரபரப்பானது. ஆனால் இறுதி செட்டில் ஆரம்பத்திலேயே சின்னெரின் சர்வீசை அல்காரஸ் 'பிரேக்' செய்ததால் அவரது கை ஓங்கியது. அதில் இருந்து மளமளவென கேம்ஸ்களை கைப்பற்றி அல்காரஸ் வெற்றிக்கனியையும் பறித்தார்.

    4 மணி 9 நிமிடங்கள் நீடித்த இந்த ஆட்டத்தில் அல்காரஸ் 2-6, 6-3, 3-6, 6-4, 6-3 என்ற செட் கணக்கில் சின்னெரை வெளியேற்றி பிரெஞ்சு ஓபனில் முதல்முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்தார்.

    2-வது அரையிறுதி போட்டியில் கேஸ்பர் ரூட் (நார்வே), அலெக்சாண்டர் ஸ்வெரேவ் (ஜெர்மனி) ஆகியோர் மோதினர். இந்த போட்டி அந்த அளவிற்கு பரபரப்பாக செல்லவில்லை. முதல் செட்டை ரூட் 2-6 எனக் கைப்பற்றினார். அதன்பின் ஸ்வெரேவ் ஆட்டத்திற்கு ரூட்டால் ஈடுகொடுக்க முடியவில்லை.

    அடுத்த மூன்று செட்டுகளையும் ஸ்வெரேவ் 6-2, 6-4, 6-2 என வரிசையாக கைப்பற்றி வெற்றி பெற்றார். இதனால் நாளை நடைபெறம் இறுதிப் போட்டியில் அல்காரஸ்- ஸ்வெரேவ் சாம்பியன் போட்டிக்காக பலப்பரீட்சை நடத்துகிறார்கள்.

    • பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பாரிசில் நடைபெற்று வருகிறது.
    • இதில் போலந்து வீராங்கனை ஸ்வியாடெக் இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.

    பாரிஸ்:

    கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடந்துவருகிறது.

    பெண்கள் ஒற்றையர் பிரிவின் அரையிறுதி போட்டியில் போலந்து வீராங்கனை இகா ஸ்வியாடெக், அமெரிக்காவின் கோகோ காப்புடன் மோதினார்.

    இதில் ஸ்வியாடெக் 6-2, 6-4 என எளிதில் கைப்பற்றி இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார்.

    • பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பாரிசில் நடந்து வருகிறது.
    • ஆண்கள் இரட்டையர் பிரிவில் போபண்ணா ஜோடி அரையிறுதியில் தோற்றது.

    பாரீஸ்:

    கிராண்டஸ்லாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பாரீசில் நடந்து வருகிறது. இதில் பல முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

    இந்நிலையில், ஆண்கள் இரட்டையர் பிரிவு அரையிறுதி ஆட்டத்தில் இந்தியாவின் ரோகன் போபண்ணா, ஆஸ்திரேலியாவின் மேத்யூ எப்டன் ஜோடி-இத்தாலியின் சைமன் பொலேலி-ஆண்ட்ரியா வவசோரி ஜோடியுடன் மோதியது.

    இதில் போபண்ணா ஜோடி 5-7, 6-2, 2-6 என்ற செட் கணக்கில் தோற்று தொடரில் இருந்து வெளியேறியது.

    • புதிய தரவரிசையில் முதலிடத்தையும் இழக்கிறார்.
    • காயத்துக்கு உடனடியாக ஆபரேஷன் செய்ய ஜோகோவிச் முடிவு செய்துள்ளார்.

    பாரீஸ்:

    உலகின் 'நம்பர் ஒன்' டென்னிஸ் வீரரும், 24 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றவருமான நோவக் ஜோகோவிச் (செர்பியா) பிரெஞ்சு ஓபனில் வலது கால்முட்டியில் ஏற்பட்ட காயத்தையும் பொருட்படுத்தாமல் 4-வது சுற்றில் 5 செட் வரை போராடி வெற்றி பெற்றார்.

    முட்டியில் வலி அதிகமானதால் ஸ்கேன் எடுத்து பார்த்த போது, ஜவ்வு கிழிந்திருப்பது தெரியவந்தது. இதனால் பிரெஞ்சு ஓபனில் காலிறுதிக்கு முன்பாக வெளியேறியதுடன், வருகிற 10-ந்தேதி வெளியாகும் புதிய தரவரிசையில் முதலிடத்தையும் இழக்கிறார்.

    இந்த நிலையில் காயத்துக்கு உடனடியாக ஆபரேஷன் செய்ய ஜோகோவிச் முடிவு செய்துள்ளார். ஆபரேஷனுக்கு பிறகு அதில் இருந்து மீள்வதற்கு 3 முதல் 6 வாரங்கள் ஆகும். எனவே அடுத்த மாதம் (ஜூலை) 1-ந்தேதி தொடங்கும் விம்பிள்டன் டென்னிஸ் போட்டியை தவற விடும் ஜோகோவிச், அதே மாத கடைசியில் நடக்கும் பாரீஸ் ஒலிம்பிக்கிலும் பங்கேற்பது சந்தேகமாகியுள்ளது.

    • பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பாரிசில் நடைபெற்று வருகிறது.
    • இதில் கஜகஸ்தான் வீராங்கனை ரிபாகினா காலிறுதியில் தோல்வி அடைந்தார்.

    பாரிஸ்:

    கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடந்துவருகிறது. 4வது சுற்று முடிந்து காலிறுதிப் போட்டிகள் இன்று நடந்தன.

    இந்நிலையில், பெண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி போட்டியில் கஜகஸ்தான் வீராங்கனை எலினா ரிபாகினா, இத்தாலி வீராங்கனை ஜாஸ்மின் பாவ்லினியுடன் மோதினார்.

    இதில் ரிபாகினா முதல் செட்டை 1-6 என இழந்தார். அடுத்த செட்டை ரிபாகினா 6-4 என கைப்பற்றினார். இதையடுத்து, வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3வது செட்டை ரிபாகினா 4-6 என இழந்து தொடரில் இருந்து வெளியேறினார்.

    இதன்மூலம் முன்னணி வீராங்கனையான ரிபாகினாவை வீழ்த்தி இத்தாலி வீராங்கனை பாவ்லினி அரையிறுதிக்கு முன்னேறி அசத்தினார்.

    • பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பாரிசில் நடந்து வருகிறது.
    • ஆண்கள் இரட்டையர் பிரிவில் போபண்ணா ஜோடி காலிறுதியில் வென்றது.

    பாரீஸ்:

    கிராண்டஸ்லாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பாரீசில் நடந்து வருகிறது. இதில் பல முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

    இந்நிலையில், ஆண்கள் இரட்டையர் பிரிவு காலிறுதி ஆட்டத்தில் இந்தியாவின் ரோகன் போபண்ணா, ஆஸ்திரேலியாவின் மேத்யூ எப்டன் ஜோடி-பெல்ஜியத்தின் சாண்டர் ஜில்-ஜோரன் லீகன் ஜோடியுடன் மோதியது.

    இதில் போபண்ணா ஜோடி 7-6 (7-3), 5-7, 6-1 என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியது.

    நாளை நடைபெறும் அரையிறுதியில் இத்தாலி ஜோடியை எதிர்கொள்கிறது.

    • 3-ம் நிலை வீரரான கார்லோஸ் அல்காரஸ் (ஸ்பெயின்) கால்இறுதி ஆட்டத்தில் 9-வது வரிசையில் உள்ள சிட்சிபாசை (கிரீஸ்) எதிர்கொண்டார்.
    • முதல் நிலை வீரரான ஜோகோவிச் (செர்பியா) காயத்தால் கால் இறுதியில் வெளியேறினார்.

     பாரீஸ்:

    கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பாரீசில் நடைபெற்று வருகிறது. 3-ம் நிலை வீரரான கார்லோஸ் அல்காரஸ் (ஸ்பெயின்) கால்இறுதி ஆட்டத்தில் 9-வது வரிசையில் உள்ள சிட்சிபாசை (கிரீஸ்) எதிர்கொண்டார்.

    இதில் அல்காரஸ் 6-3-7-6 (7-3), 6-4 என்ற நேர் செட் கணக்கில் எளிதில் வெற்றி பெற்று அரை இறுதிக்கு முன்னேறினார். அவர் அரைஇறுதியில் 2-ம் நிலை வீரரான ஜானனிக் சின்னரை (இத்தாலி) சந்திக்கிறார்.

    முதல் நிலை வீரரான ஜோகோவிச் (செர்பியா) காயத்தால் கால் இறுதியில் வெளியேறினார். இதனால் 7-ம் நிலை வீரர் கேஸ்பர் ரூட் (நார்வே) அரையிறுதி வாய்ப்பை பெற்றார்.

    அவர் அரை இறுதியில் அலெக்சாண்டர் சுவரேவ் (ஜெர்மனி) அலெக்ஸ் டி மினாரை (ஆஸ்திரேலியா) சந்திக்கிறார்.

    • ஒரு காலிறுதி ஆட்டத்தில் அமெரிக்காவின் கோகோ காப், துனிசியாவின் ஒன்ஸ் ஜபீர் உடன் மோதினார்.
    • மற்றொரு காலிறுதி ஆட்டத்தில் போலந்தின் இகா ஸ்வியாடெக், செக் குடியரசின் மார்கெட்டா வாண்ட்ரோசோவா உடன் மோதினார்.

    பாரீஸ்:

    பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் பெண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி ஆட்டங்கள் இன்று நடைபெற்றன.

    இதில் ஒரு காலிறுதி ஆட்டத்தில் அமெரிக்காவின் கோகோ காப், துனிசியாவின் ஒன்ஸ் ஜபீர் உடன் மோதினார். இந்த ஆட்டத்தின் முதல் செட்டை 4-6 என்ற புள்ளிக்கணக்கில் இழந்த கோகோ காப் ஆட்டத்தின் அடுத்த இரு செட்களை 6-2, 6-3 என்ற செட் கணக்கில் கைப்பற்றினார்.இதன் மூலம் கோகோ காப் 4-6, 6-2, 6-3 என்ற புள்ளிக்கணக்கில் துனிசியாவின் ஒன்ஸ் ஜபீரை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார்.

    மற்றொரு காலிறுதி ஆட்டத்தில் போலந்தின் இகா ஸ்வியாடெக், செக் குடியரசின் மார்கெட்டா வாண்ட்ரோசோவா உடன் மோதினார்.

    இந்த ஆட்டத்தில் ஆரம்பம் முதலே அபாரமாக செயல்பட்ட இகா ஸ்வியாடெக் 6-0, 6-2 என்ற நேர் செட் கணக்கில் மார்கெட்டா வாண்ட்ரோசோவாவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார். நாளை மறுநாள் நடைபெறும் ஒரு அரையிறுதி ஆட்டத்தில் இகா ஸ்வியாடெக் - கோகோ காப் மோத உள்ளனர்.

    • ஜோகோவிச் (செர்பியா) 4-வது சுற்றில் அர்ஜென்டினாவை சேர்ந்த பிரான்சிஸ்கோ செருன்டோலோவை எதிர்கொண்டார்.
    • பெண்கள் பிரிவில் கால் இறுதி ஆட்டம் இன்று நடக்கிறது.

    பாரிஸ்:

    கிராண்ட் சிலாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பாரிசில் நடைபெற்று வருகிறது.

    உலகின் முதல் நிலை வீரரும், 24 கிராண்ட் சிலாம் பட்டங்களை வென்ற சாதனையாளருமான ஜோகோவிச் (செர்பியா) 4-வது சுற்றில் அர்ஜென்டினாவை சேர்ந்த பிரான்சிஸ்கோ செருன்டோலோவை எதிர்கொண்டார்.

    இதில் ஜோகோவிச் 6-1, 5-7, 3-6 7-5 , 6-3 என்ற செட் கணக்கில் போராடி வென்று கால் இறுதிக்கு முன்னேறினார்.

    மற்ற ஆட்டங்களில் 4-வது வரிசையில் உள்ள அலெக்சாண்டர் சுவரேவ் (ஜெர்மனி), 7-ம் நிலை வீரரான கேஸ்பர் ரூட் (நார்வே) ஆகியோரும் கால் இறுதிக்கு தகுதி பெற்றனர்.

    5-ம் நிலை வீரரான மெட்வதேவ் (ரஷியா) 4-வது சுற்றில் அதிர்ச்சிகரமாக தோற்றார். பெண்கள் பிரிவில் கால் இறுதி ஆட்டம் இன்று நடக்கிறது.

    • டென்னிஸ் போட்டி உள்ளூர் நேரப்படி அதிகாலை 3 மணி அளவில் முடிந்தது.
    • பணிகளை முடிக்கவே குறைந்தபட்சம் அதிகாலை 7 மணி ஆகிவிடும்.

    பிரெஞ்சு ஓபன் மற்றும் இதர டென்னிஸ் போட்டி தொடர்கள் நடத்தப்படும் விதம் சரியாக இருப்பதாக தனக்கு தெரியவில்லை என்று பிரபல டென்னிஸ் வீராங்கனை கோகோ கௌஃப் வருத்தம் தெரிவித்துள்ளார்.

    டென்னிஸ் போட்டிகள் பொதுவாக நடத்தப்படும் விதம், பிரெஞ்சு ஓபன் போட்டிகளின் அட்டவணை என ஒட்டுமொத்த டென்னிஸ் போட்டிகளின் திட்டமிடல்களை கோகோ கௌஃப் கடுமையாக சாடியுள்ளார். முன்னதாக நடைபெற்ற டென்னிஸ் போட்டி உள்ளூர் நேரப்படி அதிகாலை 3 மணி அளவில் முடிந்தது, உடல்நலத்துக்கு நல்லதல்ல என்று அவர் தெரிவித்தார்.

    "அதிகாலை 3 மணிக்கு போட்டிகளை முடிப்பது, பல சமயங்களில் நீங்கள் போட்டி முடிந்ததாக நினைக்கலாம். ஆனால் அதன் பிறகு, உங்களுக்கென சில கடமைகள் இருக்கும்- அவற்றை செய்து முடிக்க வேண்டும். இந்த பணிகளை முடிக்கவே குறைந்தபட்சம் அதிகாலை 7 மணி ஆகிவிடும்."

    "இது உடல்நலனுக்கு நல்லது இல்லை என்றே நினைக்கிறேன். போட்டியில் தாமதமாக விளையாட வேண்டும் என்போருக்கு இது சரியாக இருக்காது, ஆனால் இது உங்களது அட்டவணையை அடியோடு மாற்றிவிடும். அதிக நேரம் கால தாமதத்துடன் போட்டியை நான் இதுவரை முடித்ததில்லை என்ற வகையில், நான் அதிர்ஷ்டசாலியாகவே கருதுகிறேன்," என்று கோகோ கௌஃப் தெரிவித்தார். 

    • 4-வது சுற்று ஆட்டத்தில் அலெக்ஸ் டி மினார் மற்றும் டேனியல் மெட்வதேவ் மோதினர்.
    • முதல் செட்டை வென்ற மெட்வதேவ் அடுத்த 3 செட்டை எளிதாக கோட்டைவிட்டார்.

    பாரீஸ்:

    பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பாரீசில் களிமண் தரை மைதானங்களில் நடந்து வருகிறது. இதில் ஆண்களுக்கான 4-வது சுற்று ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் டி மினார் மற்றும் டேனியல் மெட்வதேவ் மோதினர்.

    முதல் செட்டை வென்ற மெட்வதேவ் அடுத்த 3 செட்டை எளிதாக கோட்டைவிட்டார். இதனால் 4-6, 6-2, 6-1, 6-3 என்ற செட் கணக்கில் அலெக்ஸ் டி மினாரிடம் மெட்வதேவ் தோல்வியைத் தழுவினார்.

    ×