search icon
என் மலர்tooltip icon

    டென்னிஸ்

    யுனைடெட் கோப்பை கலப்பு அணி டென்னிஸ்: அமெரிக்கா அரையிறுதிக்கு முன்னேற்றம்
    X

    யுனைடெட் கோப்பை கலப்பு அணி டென்னிஸ்: அமெரிக்கா அரையிறுதிக்கு முன்னேற்றம்

    • கோகோ காஃப் முதல் போட்டியில் சீனாவின் ஷாங் சுயாய்-ஐ 7(7)-6(4), 6-2 என வெற்றி பெற்றார்.
    • டெய்லர் பிரிட்ஸ் ஷாங் ஜிஷென்னை 6-4, 6-4 என எளிதாக வெற்றி பெற்றார்.

    ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில் கலப்பு அணிகளுக்கான யுனைடெட் கோப்பை டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது.

    இதன் காலிறுதியில் அமெரிக்கா- சீனா அணிகள் மோதின. கோகோ காஃப் முதல் போட்டியில் சீனாவின் ஷாங் சுயாய்-ஐ எதிர்கொண்டார். முதல் செட் டைபிரேக் வரை சென்றது. இறுதியில் கோகோ காஃப் 7(7)-6(4) என முதல் செட்டை கைப்பற்றினார். 2-வது செட்டை 6-2 எளிதாக கைப்பற்றி வெற்றி பெற்றார்.

    டெய்லர் பிரிட்ஸ் ஷாங் ஜிஷென்னை எதிர்கொண்டார். இதில் 6-4, 6-4 என வெற்றி பெற்றார். இதன்மூலம் அமெரிக்கா அரையிறுதிக்கு முன்னேறியது.

    மற்றொரு காலிறுதியில் கஜகஸ்தான் ஜெர்மனியை 2-1 என வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது. ஜெர்மனி அணியில் காயம் காரணமாக அலெக்ஸாண்டர் ஸ்வெரேவ் இடம் பெறவில்லை.

    பெண்களுக்கான ஒற்றையர் பிரிவில் கஜகஸ்தானின் எலேனா ரிபானிகா ஜெர்மனியின் சியோஜ்மண்ட்-ஐ எதிர்கொண்டார். இதில் ரிபானிகா 6-3, 6-1 என வெற்றி பெற்றார். ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில் கஜகஸ்தானின் ஷெவ்சென்கோ- ஜெர்மனியின் டேனியல் மசூரை எதிர்கொண்டார். இதில் ஷெவ்சென்கோ 6-7 (5), 6-2, 6-2 வெற்றி பெற்றார்.

    கலப்பு போட்டியில் ஜெர்மனியின் சியேஜ்மண்ட்- பியேட்ஸ் ஜோடி 6-2, 6-2 என கஜகஸ்தானின் குலாம்பயேவா- போப்கோ ஜோடியை வீழ்த்தியது. என்றாலும் கஜகஸ்தான் 2-1 என வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது.

    Next Story
    ×