என் மலர்
டென்னிஸ்

X
இந்தியன் வெல்ஸ் ஓபன்: அரையிறுதிக்கு முன்னேறிய அல்காரஸ்- டிராப்பர்
By
மாலை மலர்14 March 2025 1:20 PM IST

- 6-3, 7-4 என்ற கணக்கில் அல்காரஸ் வெற்றி பெற்று அரையிறுதிக்கு தகுதி பெற்றார்.
- டிராப்பர் 6-4, 7-5 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார்.
வாஷிங்டன்:
இந்தியன் வெல்ஸ் ஓபன் தொடர் அமெரிக்காவில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் காலிறுதி சுற்று போட்டிகள் நடந்து வருகின்றன.
இன்று நடந்த போட்டியில் கார்லஸ் அல்காரஸ் (ஸ்பெயின்) - பிரான்சிஸ்கோ செருண்டோலோ (அர்ஜெடினா) மோதினர். முதல் செட்டை அல்காரஸ் 6-3 என்ற கணக்கில் வீழ்த்தினார். 2-வது செட் பரபரப்பாக சென்றது. இறுதியில் அல்காரஸ் 7-4 என்ற கணக்கில் வென்றார். இதனால் 6-3, 7-4 என்ற கணக்கில் அல்காரஸ் வெற்றி பெற்று அரையிறுதிக்கு தகுதி பெற்றார்.
மற்றொரு காலிறுதி ஆட்டத்தில் ஜாக் அலெக்சாண்டர் டிராப்பர் (பிரிட்டிஷ்) பெஞ்சமின் டாட் ஷெல்டன் (அமெரிக்கா) ஆகியோர் மோதினர். இதில் டிராப்பர் 6-4, 7-5 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார்.
Next Story
×
X