என் மலர்
டென்னிஸ்

X
கத்தார் ஓபன் டென்னிஸ்: ஸ்வியாடெக், ரிபாகினா காலிறுதிக்கு முன்னேற்றம்
By
மாலை மலர்13 Feb 2025 5:30 AM IST

- கத்தார் ஓபன் டென்னிஸ் தொடர் தோஹாவில் நடந்து வருகிறது.
- இதில் கஜகஸ்தான் வீராங்கனை ரிபாகினா வெற்றி பெற்றார்.
தோஹா:
கத்தார் ஓபன் டென்னிஸ் தொடர் கத்தாரின் தோஹாவில் உள்ள கலீஃபாவில் நடைபெற்று வருகிறது.
இதில் நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் தரவரிசையில் 2-ம் இடம் பிடித்தவரும், போலந்து வீராங்கனையுமான இகா ஸ்வியாடெக், செக் வீராங்கனை லிண்டா நோஸ்கோவா உடன் மோதினார்.
இதில் முதல் செட்டை 6-7 (1-7) என இழந்த ஸ்வியாடெக் அதிரடியாக ஆடி அடுத்த இரு செட்களை 6-4, 6-4 என வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
மற்றொரு போட்டியில் கஜகஸ்தான் வீராங்கனை எலினா ரிபாகினா 7-6 (7-1) 6-2 என்ற செட் கணக்கில் ஸ்லோவாகியா வீராங்கனையை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார்.
காலிறுதியில் எலினா ரிபாகினா, இகா ஸ்வியாடெக்குடன் மோத உள்ளார்.
Next Story
×
X