search icon
என் மலர்tooltip icon

    கால்பந்து

    கோபா அமெரிக்கா கால்பந்து தொடக்கம்: முதல் போட்டியில் அர்ஜெண்டினா வெற்றி
    X

    கோபா அமெரிக்கா கால்பந்து தொடக்கம்: முதல் போட்டியில் அர்ஜெண்டினா வெற்றி

    • 16 அணிகள் பங்கேற்று விளையாடுகின்றன.
    • முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் காலிறுதிக்கு முன்னேறும்.

    அட்லாண்டா:

    உலககோப்பை கால்பந்து, ஐரோப்பிய கால்பந்து போட்டிகளுக்கு அடுத்தபடியாக புகழ் பெற்றது கோபா அமெரிக்கா கால்பந்து போட்டியாகும்.

    வடஅமெரிக்கா, தென் அமெரிக்கா கண்டங்களை சேர்ந்த நாடுகள் மட்டுமே பங்கேற்கும் இப்போட்டி பழமையானதாகும். 1916-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது.

    கடைசியாக 2021-ம் ஆண்டு பிரேசிலில் நடந்த போட்டியில் அர்ஜென்டினா சாம்பியன் பட்டம் வென்றது.

    48-வது கோபா அமெரிக்கா கால்பந்து போட்டி இந்திய நேரடிப்படி இன்று காலை அமெரிக்காவில் தொடங்கியது. 16 அணிகள் பங்கேற்று விளையாடுகின்றன. அணிகள் நான்கு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன.

    ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதும். ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் காலிறுதிக்கு முன்னேறும்.

    இன்று காலை நடந்த தொடக்க ஆட்டத்தில் 'ஏ' பிரிவில் உள்ள நடப்பு சாம்பியன் அர்ஜென்டினா-கனடா அணிகள் மோதின. இதில் அர்ஜென்டினா 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

    49-வது நிமிடத்தில் ஜூலியன் அல்வரசும், 88-வது நிமிடத்தில் லாடரோ மார்டினெசும் கோல் அடித்தனர்.

    Next Story
    ×