என் மலர்
தமிழ்நாடு

தூத்துக்குடி துறைமுகத்தில் வைக்கப்பட்டுள்ள எச்சரிக்கை பலகை.
தூத்துக்குடி மாவட்டத்தில் 10 ஆயிரம் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை

- தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் உள்ள 245 விசைப்படகுகள் இன்று கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன.
- கடலோர காவல் படையினர் மற்றும் கடலோர பாதுகாப்பு படையினர் கடற்கரையில் அடிக்கடி ரோந்து சுற்றி கண்காணித்து வருகின்றனர்.
தூத்துக்குடி:
புயல் எச்சரிக்கை காரணமாக தூத்துக்குடி மீனவர்கள் இன்று முதல் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்கு செல்ல வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் மற்றும் மீன்வளத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து மாவட்டத்தில் உள்ள மீனவர்கள் இன்று கடலுக்கு செல்லவில்லை. இதனால் தூத்துக்குடி தருவைகுளம், வேம்பார், தாளமுத்து நகர், வெள்ளப்பட்டி, திரேஸ்புரம், இனிகோநகர், தெர்மல்நகர், புன்னைக்காயல், மணப்பாடு, பெரியதாழை உள்பட மாவட்டம் முழுவதும் ஆயிரம் நாட்டுபடகுகளும், 400-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளை சேர்ந்த சுமார் 10 ஆயிரம் மீனவர்கள் இன்று கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. மேலும் தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் உள்ள 245 விசைப்படகுகள் இன்று கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன.
தூத்துக்குடி கடலோர காவல் படையினர் மற்றும் கடலோர பாதுகாப்பு படையினர் கடற்கரையில் அடிக்கடி ரோந்து சுற்றி கண்காணித்து வருகின்றனர்.