என் மலர்
செய்திகள்
பாரத மாதா சிலை அமைக்க கோரி குமரி அனந்தன் உண்ணாவிரதம்
ஒகேனக்கல்:
தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிபட்டியில் தியாகி சுப்பிரமணிய சிவா நினைவிடம் உள்ளது.
இங்கு பாரத மாதா சிலை அமைக்க வேண்டும் என்று கடந்த சில ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குமரி அனந்தன் கோரிக்கை விடுத்து வருகிறார்.
இந்த நிலையில் அதே கோரிக்கையை வலியுறுத்தி சுப்பிரமணிய சிவாவின் 96–வது நினைவு நாளான இன்று பாப்பிரெட்டி பட்டியில் உள்ள அவரது நினைவிடத்தில் குமரி அனந்தன் இன்று காலை உண்ணாவிரதத்தை தொடங்கினார். மாலை வரை நடைபெறும் இந்த உண்ணாவிரதத்தில் 10–க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
அப்போது குமரி அனந்தன் கூறுகையில், இந்த பட்ஜெட் கூட்ட தொடரிலேயே சுப்பிரமணிய சிவா நினைவிடத்தில் பாரத மாதா சிலை நிறுவ அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
இதற்கிடையே சுப்பிரமணிய சிவாவின் சிலைக்கு மாலை அணிவிப்பதற்காக ஏராளமான பள்ளி மாணவ-மாணவிகள் அங்கு குவிந்துள்ளதால் பரபரப்பு நிலவி வருகிறது. இதனால் பாப்பிரெட்டிபட்டி போலீசார் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.