என் மலர்
செய்திகள்
X
இறந்த கோழிகளை வாங்கி பார், ஓட்டல்களுக்கு ‘சப்ளை’
Byமாலை மலர்4 May 2017 10:48 AM IST (Updated: 4 May 2017 10:48 AM IST)
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் ரூ.10-க்கு இறந்த கோழிகளை வாங்கி பார், ஓட்டல்களுக்கு சப்ளை செய்தவர்களை உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் கைது செய்தனர்.
பல்லடம்:
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கறி கோழிப்பண்ணைகள் உள்ளன. இங்கு கறிக்காக லட்சக்கணக்கான கோழிகள் வளர்க்கப்பட்டு வருகின்றன.
இங்கிருந்து தமிழ்நாட்டின் பிற பகுதி மற்றும் வெளி மாநிலங்களுக்கு கறிக்காக கோழிகள் ஏற்றுமதி செய்யப்படுகிறன.
பண்ணைகளில் வளர்க்கப்படும் கோழிகள் நோய்வாய்ப்பட்டு இறந்தால் கோழிகளின் உடலை குழிதோண்டி புதைத்து விடுவார்கள்.
சிலர் இறந்த கோழிகளை விற்பனை செய்வதாகவும், அவைகளை சிலர் குறைந்த விலைக்கு வாங்கி கறியாக தயார் செய்து மதுக்கடை பார்கள், சிறிய ஓட்டல்கள், தள்ளுவண்டி கடைகளுக்கு விற்பனை செய்வதாக திருப்பூர் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர் தமிழ்ச்செல்வனுக்கு புகார்கள் வந்தன.
இதனையடுத்து நேற்று இரவு பல்லடம் லட்சுமி மில்ஸ் பகுதியில் உதவி அதிகாரிகளுடன் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டார். அப்போது அங்கிருந்த காட்டுப்பகுதியில் சிலர் கோழிகளுடன் சென்றனர்.
இதனையடுத்து அதிகாரிகள் அவர்களை பின் தொடர்ந்து சென்றனர். ஒரு இடத்தில் 3 வாலிபர்கள் இறந்த கோழிகளை சுத்தம் செய்து கறியாக தயார் செய்தனர். அவர்களை அதிகாரிகள் மடக்கிப்பிடித்தனர். அவர்களிடம் இருந்து 70 கிலோ இறந்த கோழிகளை பறிமுதல் செய்தனர்.
விசாரணையில் கறியை தயார் செய்த ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த ராஜா (வயது 35), ராஜபாளையத்தை சேர்ந்த தனபால் (27), பரமகுடியை சேர்ந்த தங்கதுரை (30) ஆகியோர் என்பது தெரியவந்தது. அவர்களிடம் விசாரணை நடத்தியபோது, பண்ணைகளில் இறக்கும் கோழி ஒன்றின் விலை ரூ.10-க்கு வாங்கி அதனை மறைவான பகுதியில் சுத்தம் செய்து கறியாக தயார் செய்வோம். தயார் செய்யப்பட்ட கறிகள் சில மதுபார்கள், தள்ளுவண்டி கடைகள், சிறிய ஓட்டல்களில் கிலோ ரூ.70 முதல் ரூ.100 வரை விற்பனை செய்வோம்.
குறைந்த விலைக்கு கறி கிடைப்பதால் ஓட்டல்கள், மதுபார்கள், தள்ளுவண்டி கடை உரிமையாளர்கள் அதிகம் வாங்கி அதிக விலைக்கு விற்பனை செய்தனர் என்று கூறினர்.
தொடர்ந்து அவர்களிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

Next Story
×
X