என் மலர்
செய்திகள்
X
பஸ் ஊழியர்கள் போராட்டத்துக்கு ஆதரவாக தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் நாளை கண்டன ஆர்ப்பாட்டம்
Byமாலை மலர்15 May 2017 1:40 PM IST (Updated: 15 May 2017 1:40 PM IST)
போக்குவரத்து ஊழியர்கள் போராட்டத்துக்கு ஆதரவாக தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் நாளை கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளது.
சென்னை:
போக்குவரத்து கழக தொழிலாளர்கள் ஓய்வூதிய நிலுவை தொகை உள்பட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த போராட்டத்துக்கு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் ஆதரவு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட உள்ளது. இதுபற்றி தமிழ்நாடு அரசு ஊழியர்சங்க மாநில தலைவர் எம்.சுப்பிரமணியன் ‘மாலைமலர்’ நிருபரிடம் கூறியதாவது:-
போக்குவரத்து கழக தொழிலாளர்களின் கோரிக்கை நியானமான கோரிக்கையாகும். தொழிலாளர்களிடம் அரசு பிடித்தம் செய்த பணத்தை திரும்ப கேட்கிறார்கள். ஒரு தொழிலாளி ஓய்வு பெறும்போது பிடித்தம் செய்த பணத்தை எதிர்பார்ப்பது இயல்பு. அந்த பணம் வராவிட்டால் குடும்பம் நடத்துவது மிக கஷ்டம் என்பது அனைவருக்கும் தெரியும்.
எனவே தொழிலாளர்களின் போராட்டத்தை உடனே அரசு முடிவுக்கு கொண்டுவர வேண்டும்.
போக்குவரத்து கழக தொழிலாளர்களின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் நாளை போராட்டத்தில் குதிக்கிறது. தமிழ்நாடு முழுவதும் அனைத்து தாலுகா வட்ட கிளைகளிலும் மதிய சாப்பாடு இடைவேளையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுகிறோம். சில ஊர்களில் மாலையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும். சென்னையில் 6 இடங்களில் நாளை ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. 64 துறை வாரியான சங்கங்கள் இதில் பங்கேற்கிறது.விருதுநகரில் மாநிலத் தலைவரும், சென்னையில் சங்க பொதுச் செயலாளர் அன்பரசும் போராட்டத்தில் பங்கேற்கிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story
×
X