search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தமிழகத்தில் இன்றும் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் அறிவிப்பு
    X

    தமிழகத்தில் இன்றும் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் அறிவிப்பு

    வெப்பச்சலனம் நீடிப்பதால் தமிழகத்தின் அனேக இடங்களில் இன்றும் மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று வானிலை மையம் அறிவித்துள்ளது.

    சென்னை, ஆக.2-

    தமிழ்நாட்டில் நேற்று வெப்பசலனம் காரணமாக பல இடங்களில் பரவலாக மழை பெய்துள்ளது.

    அதிகபட்சமாக மதுராந்தகத்தில் 15 செ. மீட்டர் மழை பதிவாகி உள்ளது. திருச்சி மாவட்டம் புள்ளம்பாடியில் 14 செ.மீ., திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பகுதியில் 13 செ.மீட்டர் மழை பெய்துள்ளது.

    சென்னையில் நள்ளிரவில் எழும்பூர், சென்ட்ரல், கோயம்பேடு, அண்ணாநகர், கீழ்ப்பாக்கம், பூந்தமல்லி, அம்பத்தூர், ஆவடி, வண்ணாரப்பேட்டை, திருவொற்றியூர், தாம்பரம், குரோம்பேட்டை, பல்லாவரம், அடையார், திருவான்மியூர், மயிலாப்பூர் உள்பட நகரின் பல இடங்களில் பரவலாக மழை பெய்துள்ளது.

    இதுபற்றி சென்னை வானிலை மைய அதிகாரி கூறியதாவது:-

    கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் காற்றின் ஈரப்பதம் குறைந்து வெப்பக்காற்று அனலாக வீசியது.

    வறண்ட வானிலை நிலவியதால் வெப்பச் சலனம் ஏற்பட்டு அதனால் தமிழகத்தின் பல பகுதிகளில் இரவில் மழை பெய்துள்ளது.

    வெப்பச்சலனம் நீடிப்பதால் தமிழகத்தின் அனேக இடங்களில் இன்றும் மழை பெய்யும்.

    சென்னையை பொறுத்த வரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். இரவில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×