search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரெயில் பயணத்தின்போது எலி கடித்து சூட்கேஸ் சேதம்: பயணிக்கு நஷ்டஈடு
    X

    ரெயில் பயணத்தின்போது எலி கடித்து சூட்கேஸ் சேதம்: பயணிக்கு நஷ்டஈடு

    ரெயில் பயணத்தின்போது எலி கடித்து சூட்கேஸ் சேதம் அடைந்ததை தொடர்ந்து பயணிக்கு ரூ.27,350 நஷ்டஈடு வழங்க தென்னக ரெயில்வே நிர்வாகத்துக்கு நுகர்வோர் கோர்ட்டு உத்தரவிட்டது.

    சென்னை:

    சென்னை கொளத்தூரைச் சேர்ந்தவர் தேவ தாஸ். இவர் கேரள மாநிலம் ஆலப்புழையில் இருந்து சென்னைக்கு எக்ஸ்பிரஸ் ரெயிலில் 2 அடுக்கு குளிரூட்டப்பட்ட பெட்டியில் (ஏ.சி. பெட்டியில்) பயணம் செய்தார்.

    ரெயில் மறுநாள் சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தை வந்தடைந்தது. ரெயிலில் இருந்து இறங்கியபோது அவர் தனது விலை உயர்ந்த சூட்கேசை பார்த்தார். அது எலி கடித்து குதறி சேதம் அடைந்த நிலையில் இருந்தது.

    இதனால் மனவருத்தம் அடைந்த அவர் சென்னை சென்ட்ரல் ரெயில் நிலைய அதிகாரியிடம் முறையிட்டார். அதற்கு அவர் சேதம் அடைந்த சூட்கேஸ் போட்டோவுடன் தென்னக ரெயில்வேயிடம் புகார் அனுப்புங்கள் என அறிவுரை கூறினார்.

    அதையடுத்து அவர் தென்னக ரெயில்வே நிர்வாகம் மீது நுகர்வோர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அதில், “நான் 12,600-க்கு வாங்கிய சூட்கேசுடன் எக்ஸ்பிரஸ் ரெயிலில் பயணம் செய்தேன். ஆனால் சரியான பராமரிப்பு இல்லாததால் ரெயில் பெட்டியில் எலிகள் புகுந்து எனது சூட்கேசை கடித்து சேதப்படுத்தியுள்ளன. எனவே எனக்கு உரிய நஷ்டஈடு வழங்க வேண்டும்“ என கூறியிருந்தார்.

    அந்த வழக்கை விசாரித்த நுகர்வோர் கோர்ட்டு பயணி தேவதாசுக்கு தென்னக ரெயில்வே நிர்வாகம் ரூ.27,350 நஷ்டஈடு வழங்க உத்தர விட்டது.

    Next Story
    ×