search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மானிய ஸ்கூட்டருக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு:  10-ம் தேதி வரை விண்ணப்பம் வழங்கலாம்
    X

    மானிய ஸ்கூட்டருக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு: 10-ம் தேதி வரை விண்ணப்பம் வழங்கலாம்

    பணிபுரியும் பெண்களுக்கான மானிய விலை ஸ்கூட்டருக்கு விண்ணப்பம் வழங்க 10-ம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. #AmmaTwoWheelerScheme
    சென்னை:

    ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது, பெண்களுக்கான இருசக்கர வாகன மானியத் திட்டத்தை அறிவித்தார். தற்போது அவரது பிறந்த நாளான வரும் 24-ம் தேதி இந்த திட்டம் தொடங்கப்பட உள்ளது. தமிழகம் முழுவதும் 1 லட்சம் பெண்களுக்கு முதல் கட்டமாக மானிய ஸ்கூட்டர் வழங்கப்படுகிறது.

    தனியார் நிறுவனங்கள், அலுவலகங்களில் வேலை பார்க்கும் பெண்கள் மற்றும் சுயமாக தொழில் செய்யும் பெண்களுக்கு ரூ.25 ஆயிரம் மானியத்தில் ஸ்கூட்டர் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. மானிய விலையில் ஸ்கூட்டர் பெறுவதற்கு கடந்த 22-ந்தேதி முதல் விண்ணப்பங்கள் வினியோகிக்கப்பட்டது.

     

    இதற்காக அனைத்து பகுதிகளிலும் மானிய விலை ஸ்கூட்டர் வாங்குவதற்கு பெண்களிடையே ஆர்வம் அதிகரித்தது. சென்னை மாநகராட்சியின் 15 மண்டல அலுவலகங்களிலும் விண்ணப்பங்கள் வாங்க திரண்டனர்.

    மானியம் பெறுவதற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்ததால் ஆவணங்களை வாங்குவதற்கு சிறிது கால அவகாசம் தேவைப்பட்டது. விண்ணப்பிக்க நேற்று கடைசி நாள் என்பதால் விண்ணப்பிக்க பெண்கள் அதிக அளவில் குவிந்தனர். இதனால் சிறப்பு கவுண்டர்களும் திறக்கப்பட்டன. எனினும் பலர் விண்ணப்பங்கள் அளிக்க முடியாத நிலை ஏற்பட்டது. எனவே, விண்ணப்பிக்க காலக்கெடுவை நீட்டிக்க வேண்டும் என பெண்கள் கோரிக்கை விடுத்தனர்.

    இந்நிலையில், மானிய விலை ஸ்கூட்டருக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசத்தை அரசு நீட்டித்துள்ளது. 10-ம் தேதி வரை விண்ணப்பங்களை அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. #AmmaTwoWheelerScheme #tamilnews
    Next Story
    ×