என் மலர்
செய்திகள்
X
காதலர் தின கொண்டாட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும்: கமிஷனர் அலுவலகத்தில் இந்து மக்கள் கட்சி மனு
Byமாலை மலர்6 Feb 2018 1:02 PM IST (Updated: 6 Feb 2018 1:02 PM IST)
சென்னையில் காதலர் தின கொண்டாட்டத்துக்கு தடை விதிக்கக் கோரி கமிஷனர் அலுவலகத்தில் இந்து மக்கள் கட்சியினர் சார்பில் மனு கொடுக்கப்பட்டுள்ளது.
சென்னை:
உலகம் முழுவதும் வருகிற 14-ந்தேதி காதலர் தினம் கொண்டாடப்படுகிறது.
காதலர்களுக்கு அடைக்கலம் கொடுத்ததால் மரண தண்டனை விதிக்கப்பட்ட ஐரோப்பிய பாதிரியார் வாலன்டைன் நினைவாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்தியாவில் காதலர் தின கொண்டாட்டத்திற்கு சில அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. அன்று கடற்கரை, பூங்காக்களுக்கு வரும் காதல் ஜோடிகளை குறி வைத்து தாக்குதல் சம்பவம் நடக்கிறது.
இந்த நிலையில் சென்னையில் காதலர் தின கொண்டாட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று அர்ஜுன் சம்பத் தலைமையிலான இந்து மக்கள் கட்சி சார்பில் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு கொடுக்கப்பட்டுள்ளது.
அக்கட்சியின் மாநில அமைப்பு செயலாளர் கணபதி ரவி, அலுவலக செயலாளர் குமரவேல் மற்றும் நிர்வாகிகள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-
பிப்ரவரி 14-ந்தேதி காதலர் தினத்தன்று நட்சத்திர ஓட்டல்களில் கொண்டாட்டங்கள் நடக்கின்றன. காதலர் தினம் நமது நாட்டின் பண்பாட்டுக்கு முரணானது.
நமது கலாச்சாரத்தை சீர்குலைக்கும் நோக்கத்துடன் பன்னாட்டு வியாபார வணிக நிறுவனங்கள் காதலர் தினத்தை பரப்பி வருகின்றன.
தனியார் நட்சத்திர விடுதிகளில் கொண்டாட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இதில் ஜோடியாக வரும் பெண்களுக்கு இலவசமாக மது வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
எனவே ஆபாசமான இந்த காதலர் தின கொண்டாட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும். பூங்கா, கடற்கரையில் காதல் ஜோடிகள் அத்து மீறி செயல்படுகிறார்கள். அதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #tamilnews

Next Story
×
X