என் மலர்
செய்திகள்
X
பொதுமக்கள் கூடும் இடங்களில் போலீஸ் பேண்டு வாத்திய இசை நிகழ்ச்சி: டி.ஜி.பி. உத்தரவு
Byமாலை மலர்6 Feb 2018 2:25 PM IST (Updated: 6 Feb 2018 2:25 PM IST)
தமிழ்நாடு முழுவதும் பொது மக்கள் கூடும் இடங்களில் இசை நிகழ்ச்சி நடத்த போலீஸ் டி.ஜி.பி. டி.கே ராஜேந்திரன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
சென்னை:
போலீஸ் துறையில் பேண்டு வாத்திய இசைக்குழு உள்ளது. அவர்கள் அரசு மற்றும் போலீஸ் விழாக்களில் மட்டும் இசை நிகழ்ச்சி நடத்துகின்றனர்.
இந்தநிலையில் அவர்கள் தமிழ்நாடு முழுவதும் பொது மக்கள் கூடும் இடங்களில் இசை நிகழ்ச்சி நடத்த போலீஸ் டி.ஜி.பி. டி.கே ராஜேந்திரன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இசை நிகழ்ச்சியின் போது பொதுமக்களுக்கு போலீசார் செய்யும் சேவைகள் மற்றும் பணிகள் குறித்து துண்டு பிரசுரங்கள் வினியோகித்து விளக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சி வாரந்தோறும் சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் நடத்தப்படுகிறது. சென்னையில் பொதுமக்கள் அதிக அளவில் கூடும் ஷாப்பிங் மால்கள், ரெயில், பஸ் நிலையங்கள் மற்றும் பூங்காக்களில் நடத்தப்பட உள்ளது.Next Story
×
X